தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு (நீட்), மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் இத்தேர்வு நடைபெற இருப்பதால், மாணவர்கள் முகக்கவசம், கையுறைகளுடன் தேர்வு எழுதுவதை பயிற்சி செய்ய வேண்டும்.
நீட் ஆர்வலர்களுக்கான சில குறிப்புகள் இங்கே.
நம்பிக்கையுடன் இருங்கள்: வழக்கத்தை விட, இந்த ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுக்கு அதிக நேரம் கிடைத்தது என்று கூறலாம். மனதிற்குள் ஏதேனும் தயக்கம் (அ) அவநம்பிக்கை இருந்தால், உடனடியாக அதில் இருந்து மீண்டு வாருங்கள். கவலையும், பதட்டமும் நிச்சயமாக உங்களுக்கு உதவப் போவதில்லை. மாணவர்களே! ஏற்கனவே அறிந்ததையும், தெரிந்ததையும் கவனம் செலுத்துங்கள்…. ஒருமுறை திரும்ப பாருங்கள். என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள், வரைபடங்கள் விளக்கப்படங்கள், எழுதி வைத்த குறிப்புகள் போதுமானதாக இருக்கும். கடைசி நேரத்தில் பாடப்புத்தகங்களை ஆழமாக ஆராய்வதையும், தெரியாத பகுதிகளில் கவனம் செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
எண்ணியல் கணக்குகளைத் தீர்ப்பது கடினமாக இருந்தால், உயிரியல் மற்றும் வேதியியலை பாடப்பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்துங்கள். அதிகமான வெயிட்டேஜ் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துங்கள். அணுகுமுறையில் சில மாற்றங்களை கொண்டு வருவதையும் யோசியுங்கள். உதாரணாமாக, இயற்பியல் பாடத்தில் நீங்கள் வலுவானதாக இருந்தால், உயிரியல் (அ) வேதியியல் கேள்விகளை முதலில் தொடங்குகள். இது, தேர்வின் போது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். கடினமான கேள்விகளை பின்னர் தீர்க்க தொடங்கலாம்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
பெற்றோர்களின் கடமை என்ன? இது தங்கள் குழந்தையின் எதிர்காலம் என்பதால், பெற்றோர்கள் பெரும்பாலும் அக்கறை காட்டுகின்றனர். இருப்பினும், தங்கள் எதிர்பார்ப்பை குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது. குழந்தையின் செயல்திறனை கேள்வியாக்கக் கூடாது. இத்தகைய செயல், மாணவர்களின் செயல்திறனை கடுமையாக பாதிக்கும். கடைசி நேரம் வரை, குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்களின் ஆதரவான அணுகுமுறை குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க உதவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:National eligibility cum entrance test neet 2020 nta neet exam news