மத்திய அரசு நிறுவனமான தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் : தேசிய உரத் தொழிற்சாலை
மொத்த காலிப்பணியிடங்கள் : 44
மேலாண்மை பயிற்சி (HR) - 19
மேலாண்மை பயிற்சி (Marketing) -25
கல்வித் தகுதி : ( மேலாண்மை பயிற்சி (HR) - Personnel Management, Industrial Relations, Human Resource Management, HR போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்பிஏ அல்லது முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலாண்மை பயிற்சி (Marketing) - விவசாயத்துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஎஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது விவசாயத்துறையில் பி.எஸ்சி பட்டம் முடித்து சந்தையியல், விவசாய சந்தையியல், உலக சந்தையியல், கிராமப்புற மேலாண்மை பாடப்பிரிவில் எம்பிஏ அல்லது பிஜிடிபிஎம் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம் : ரூ.700.
(எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.)
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.nationalfertilizers.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14.06.2019