2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் (MNC) தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான உச்ச அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கான 112 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது, அவை தகுதிவாய்ந்த அதிகாரியால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும்.
இந்தநிலையில், 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன என்று கூறினார்.
இப்போது, இந்தக் கல்லூரிகள் அனைத்தும் ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும், அவை இணைக்கப்பட்ட மருத்துவமனையின் படுக்கை எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உத்தேச மருத்துவ இடங்களை முடிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் குழு நேரடியாக சோதனை செய்த பின்னர், புதிய மருத்துவக் கல்லூரி திறக்க அனுமதி வழங்க இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“