scorecardresearch

வெளிநாட்டில் படிக்க ஆசையா? அரசு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பம் ஆரம்பம்

வெளிநாடுகளில் படிக்க விரும்புகிறீர்களா? தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான பதிவு செயல்முறை மார்ச் 31 அன்று முடிவடைகிறது

வெளிநாட்டில் படிக்க ஆசையா? அரசு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பம் ஆரம்பம்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டம் 2023 க்கான பதிவு செயல்முறையை புதன்கிழமை தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான பதிவு செயல்முறை 45 நாட்களுக்கு திறந்திருக்கும், அதாவது மார்ச் 31 அன்று (நள்ளிரவு) முடிவடையும்.

இதையும் படியுங்கள்: வெளிநாட்டு கல்வி; 10 ஆண்டுகளில் 4.6 லட்சம் பேர் கல்விக் கடன் பெற்றுள்ளனர்; மத்திய அரசு

தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டம் 2023: பதிவு செய்வது எப்படி

படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — https://nosmsje.gov.in/(X(1)S(p1czato5ayq0hoprvig4km10))/Default.aspx

படி 2: முகப்பு பக்கத்தில், மேல் ஸ்க்ரோலில் கொடுக்கப்பட்டுள்ள ‘பதிவு’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.

படி 3: முழு பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, ஆதார் எண் போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

படி 4: கேப்ட்சாவை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 5: எதிர்கால குறிப்புக்காக படிவத்தை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.

இந்த உதவித்தொகை பின்வரும் வகைகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் கிடைக்கிறது: பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள்.

உதவித்தொகைக்கு தகுதி பெற, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் அல்லது தகுதித் தேர்வில் அதற்கு சமமான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், அவர்களது குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகைக்கு மொத்தம் 125 இடங்கள் உள்ளன. அவை, பட்டியல் சாதியினர் (115), மறுக்கப்பட்ட, நாடோடி மற்றும் அரை நாடோடி பழங்குடியினர் (6), நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்கள் (4). இந்த உதவித்தொகையில் கல்விக் கட்டணம், பராமரிப்புக் கட்டணம் (அமெரிக்கா ஆண்டுக்கு $ 15,400/-, இங்கிலாந்தில் ஆண்டுக்கு £ 9,900/-), தற்செயல் கட்டணம், விசா கட்டணம், உபகரணக் கட்டணம், கல்விக் கட்டணம் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் மற்றும் எகானமி வகுப்பின் விமானப் போக்குவரத்து ஆகியவை அடங்கும் என திட்டத்தின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: National overseas scholarship scheme 2023 registration begins nosmsje gov in