/indian-express-tamil/media/media_files/q3QRGY0pXtroduMYPKPU.jpg)
National Talent Search Exam 2024
இளம் விஞ்ஞானிகளை கண்டறியும் தேசிய அறிவியல் திறனறி தேர்வில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள், விஞ்ஞாண பாரதி, என்.சி. இ.ஆர்.டி., இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது.
அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் இத்தேர்வானது வரும் அக். 23 மற்றும் அக். 27 ஆகிய இரு தினங்களில், இணைய வழியில் நடக்க உள்ளது.
தேர்வுக்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு, அறிவியல் அறிஞர்களுடன் அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைந்து தேர்வுக்கு சிறப்பாக தயார் செய்வதற்கு வழிகாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வுக்கு விண்ணப்பிக்க, www.vvm.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.