/tamil-ie/media/media_files/uploads/2019/02/exam-board7591.jpg)
Neet Examination Results declared at ntaneet.nic.in:
என்.டி.ஏ, யூ.ஜி.சி நெட் ஜூன் 2019 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச் 1 முதல் முன்பதிவு செய்யலாம்.
தேசிய சோதனை நிறுவனம் எனப்படும் என்.டி.ஏ, 2019 - ஜூன் மாதத்தில் நடக்கவிருக்கும் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது சம்பந்தமான ஒரு குறுகிய அறிக்கையை மட்டும் வெளியிட்டிருக்கும் என்.டி.ஏ, தேர்வுக்கான முன்பதிவு தொடங்கியதும் விரிவான அறிக்கையை வெளியிட உள்ளது.
யூ.ஜி.சி நெட் அல்லது உதவி பேராசிரியர், ஜூனியர் ஆராய்ச்சியாளர் ஆகியவற்றிற்கான தேசிய தகுதி தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் மார்ச் 1-ம் தேதி முதல், ntanet.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
யூ.ஜி.சி நெட் ஜூன் 2019 தேர்வில் ugcnetonline.in என்ற இணையதளத்தில் இருக்கும் புதிய சிலபஸை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.டி.ஏ, யூ.ஜி.சி நெட் ஜூன் 2019-க்கான முக்கிய தேதிகள்:
ஆன்லைன் முன்பதிவு துவக்கம் - மார்ச் 1, 2019
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் - மார்ச் 30, 2019:
ஹால் டிக்கெட் வெளியாகும் நாள் - மே 15, 2019
தேர்வு நடைபெறும் நாட்கள் - ஜூன் 20, 21, 24, 25, 26, 27 மற்றும் 28, 2019
முடிவு வெளியாகும் நாள் - ஜூலை 9, 2019
டிசம்பரில் நடந்தத் தேர்வு போல, என்.டி.ஏ, யூ.ஜி.சி நெட் ஜூன் 2019 தேர்வும் கணினியை அடிப்படையாக வைத்து நடக்கிறது. வெவ்வேறு நாட்களில் நடைப்பெறும் இந்தத் தேர்வில், மாணவர்கள் தங்களுக்கு உகந்த நாளை தேர்வெழுதும் நாளாக ‘செலெக்ட்’ செய்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.