இந்த பரிந்துரையை 2022 சமூக அறிவியல் பாடக் குழு முன்வைத்துள்ளது. மேலும், இது அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற பேராசிரியர் சி.ஐ. இசாக் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: NCERT panel recommends replacing India with Bharat in school textbooks
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை (NCERT) திருத்துவதற்கான குழு, 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமூக அறிவியல் பாடப்புத்தகங்களிலும் ‘இந்தியா’ என்பதை ‘பாரத்’ என்று அழைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
“இந்த பரிந்துரையை 2022 சமூக அறிவியல் குழு செய்துள்ளது. மேலும், அடுத்த கல்வியாண்டிலிருந்து இது செயல்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால், இது அனைத்தும் NCERT-ஐப் பொறுத்தது” என்று அந்த குழுவின் தலைவர் பேராசிரியர் சி.ஐ. இசாக் indianexpress.com கூறினார். இசாக் ஒரு வரலாற்றாசிரியர், பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
இந்திய வெற்றிகள் பாடத்திட்டத்தில் ஒரு பெரிய பகுதியாக இருக்க வேண்டும் என்று இந்த குழு முன்மொழிந்துள்ளது என்றும் அவர் கூறினார். “தற்போது NCERT புத்தகங்களில் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாறு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, எனவே, 1947 முதல் இப்போது வரை நடந்த வரலாற்று நிகழ்வுகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். மேலும், சுதந்திரத்திற்கு முன் ஒதுக்கப்பட்ட பாடத்தின் அளவை எண்ணிக்கையை குறைக்கலாம்” என்று அவர் மேலும் கூறினார்.
‘பண்டைய வரலாறு’ என்பதை ‘இந்திய வரலாற்றின் பாரம்பரிய காலம்’ என்று மாற்றவும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது. நாட்டின் சாதனைகள், வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி மேலும் கற்பிக்க இந்திய அறிவு முறை பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க இந்த குழு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
G20 விருந்துக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்களில் மத்திய அரசு ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்குப் பதிலாக ‘பிரசிடெண்ட் ஆஃப் பாரத்’ என்று செப்டம்பரில் பயன்படுத்திய பின்னர், நாடு முழுவதும் விவாதம் தொடங்கிய பிறகு, NCERT புத்தகங்களில் முன்மொழியப்பட்ட இந்த மாற்றம் வந்துள்ளது.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து எழுந்த சலசலப்புக்கு பதிலளித்த NCERT, இது நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் குழுவின் பரிந்துரை என்பதால், இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று கூறியது. “புதிய பாடத்திட்டங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை உருவாக்குவது செயல்பாட்டில் உள்ளதால், அந்த நோக்கத்திற்காக பல்வேறு பாடத்திட்டப் பகுதிக் குழுக்கள் NCERT-ஆல் அறிவிக்கப்பட்டு வருவதாக NCERT கூறுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிப்பது மிகவும் முதிர்ச்சியற்றதாக இருக்கும்” என்று என்.சி.இ.ஆர்.டி ‘எக்ஸ்’ தளத்தில் ட்வீட் செய்துள்ளது.
இதற்கிடையில், NCERT 3-12 வகுப்புகளுக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்புடன் (NCF) பள்ளி பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள், கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்கள் ஆகியவற்றை சீரமைப்பதற்கு பொறுப்பான 19 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைப்பதன் மூலம் புதிய பாடப்புத்தகங்களை உருவாக்குவதற்கான இறுதிக் கட்டத்தையும் தொடங்கியது.
இந்தக் குழுவின் உறுப்பினர்களில் சிலர், களப் பதக்கம் வென்ற மஞ்சுல் பார்கவா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய், ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த சம்ஸ்கிருத பாரதியின் நிறுவன உறுப்பினர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, புரவலர் சுதா மூர்த்தி மற்றும் பாடகர் சங்கர் மகாதேவா ஆகியோர் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“