தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) சதீ போர்ட்டல் 2024 ('Sathee Portal 2024') என்ற இலவச சுயமதிப்பீட்டு கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மாணவர்கள் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலம் மற்றும் பல்வேறு பிராந்திய மொழிகள் உட்பட பல மொழிகளில் பயிற்சியை இந்த போர்டல் வழங்குகிறது.
சதீ ஆன்லைன் தளமானது மாணவர்களுக்கு இலவச கற்றல் பொருட்கள், வீடியோ விரிவுரைகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் நிபுணர் பயிற்சி உட்பட ஏராளமான சேவைகளை வழங்குகிறது. இந்த முயற்சியானது பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விலையில்லா கற்றல் பொருட்கள் மற்றும் வளங்களை வழங்குவதன் மூலம், சாதனை இடைவெளியைக் குறைக்கவும், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 437,000 மாணவர்கள் ஏற்கனவே இந்தத் தளத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சதீ போர்ட்டல் 2024க்கு பதிவு செய்வது எப்படி?
படி 1: அதிகாரப்பூர்வ NCERT இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள சதீ போர்ட்டல் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
படி 2: உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் முந்தைய கல்விப் பதிவுகளை வழங்குவதன் மூலம் கணக்கை உருவாக்கவும்.
படி 3: JEE, NEET அல்லது SSC போன்ற நீங்கள் தயாராகும் போட்டித் தேர்வைத் தேர்வு செய்யவும்.
படி 4: பதிவு செய்தவுடன், நேரலை அமர்வுகள், சுய மதிப்பீட்டு கருவிகள் மற்றும் வீடியோ விரிவுரைகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள்.
தளத்தில், ஜே.இ.இ மற்றும் பிற பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் புதிய க்ராஷ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வு போன்ற தேசிய போட்டித் தேர்வுகளுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு கற்றல் பொருட்களைப் பயன்படுத்தலாம். GATE, CAT மற்றும் UPSC ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
ஐ.ஐ.டி.,கள், என்.ஐ.டி.,கள் மற்றும் எய்ம்ஸ் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களின் பாட நிபுணர்கள் மற்றும் வழிகாட்டிகள் மாணவர்களுக்கு ஆதரவை வழங்குகிறார்கள். கல்வி வழிகாட்டிகள் மற்றும் மூத்த மாணவர்கள் நேரடி அமர்வுகளின் போது உதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறார்கள் மற்றும் தனிப்பட்ட ஆதரவை உறுதி செய்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.