தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு விண்ணப்பப் படிவத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, விண்ணப்த்தாரர்கள் என்டிஏயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பேஸ் 1 மற்றும் பேஸ் 2 விண்ணப்ப படிவத்தில் அக்டோபர் 26 ஆம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் படிவத்தில் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம்
- பாலினம்
- குடியுரிமை
- மெயில் ஐடி
- பிரிவு
- உட்பிரிவு
- கல்வித்தகுதி
இத்துடன் பேஸ் 2 பதிவில் குறிப்பிட்ட விவரங்களையும் மாற்றிக்கொள்ளலாம்
தற்போது மீண்டும் விண்ணப்ப படிவத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கான வசதிக்கு, எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் பேஸ் 2 படிவத்தை நிரப்பாத விண்ணப்பத்தாரர்களுக்கு, தேர்வு முடிவு வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வின் ஆன்சர் கி அக்டோபர் 15 ஆம் தேதி வெளியான நிலையில், தேர்வு முடிவுகளும் தீபாவளிக்கு முன்பு நிச்சயம் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil