Advertisment

50 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலை, காரணம் என்ன?

பொறியியல் படிப்புகளுக்கான தேவை குறைந்து கொண்டிருந்தபோது, ​​GO-92 அரசு ஆணை செயற்கையான தேவையை உறபத்தி செய்ததாக நீதிபதி சந்துரு கூறுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Highlights: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு; உயர் கல்வித்துறையில் அமல்

Tamilnadu Engineering colleges facing closure, Education news

கல்வித் துறையில் தமிழ்நாடு பல சாதனைகள் புரிந்திருந்தாலும், கடந்த பத்தாண்டு காலமாக மாநிலத்தில் உள்ள பல பொறியியல் கல்லூரிகள்  விளிம்பில் நிற்கின்றன.

Advertisment

பெயர் குறிப்பிட விரும்பாத உயர் கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில்"50 க்கும் மேற்பட்ட கல்லூரி நிறுவனங்கள், கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் (டிசிஇ ) தங்கள் இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்ததாக கூறினார்.

விரிவாக கூறுகையில்,"30 பொறியியல் கல்லூரி  நிறுவனங்கள், தங்கள் கல்லூரியை கலைக் கல்லூரியாக மாற்றுவதற்கான கோரிக்கைகளுடன் எங்களை அணுகியுள்ளனர். ஏழு பொறியியல் கல்லூரிகள் உடனடியாக மூடுவதற்கான அனுமதி கேட்டு முறையாக கடிதம் எழுதியுள்ளனர். மேலும், தங்கள் மாணவர்களை மற்ற கல்லூரிகளுக்கு மாற்றுவதற்கான அரசாங்கத்தின் உதவியையும் கோரியுள்ளனர். பன்னிரெண்டு பொறியியல் கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டு முதல் அட்மிஷனை நிறுத்தவதாகவும், அடுத்த மூன்றாண்டுகளில் மூடப்படுவதற்கான அனுமதி கோரியுள்ளனர்,”என்று கூறினார்.

இவரின் கூற்றுப்படி, நிர்வாகம் மாணவர்கள்  சேர்க்கைகளில் "குறிப்பிடத்தக்க சரிவை" சந்தித்ததால்  கல்லூரிகள் தொடர்ந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆங்கிலத்தில், படிக்க IT boom plateauing, admissions dip, many Tamil Nadu engineering colleges face closure

எவ்வராயினும், பொறியியல் கல்லூரியை கலைக்  கல்லூரியாக மாற்றுவதில் பல தொழில்நுட்ப சவால்களை உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும்,மாணவர்களை வேறொரு கல்லூரிக்கு மாற்றும் செயல், அவர்கள் மனநிலையில்  பல சவால்களைத் தரும்.

கலைக் கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் நிர்வாக அம்சங்கள் வளைந்து கொடுக்கும் தன்மை உடையவை. ​பொறியியல் சேர்க்கைகளில் மையப்படுத்தப்பட்ட கவுன்சிலிங் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், ஒரு கலைக் கல்லூரி சேர்கையில் இதுபோன்ற பொதுவான கட்டுப்பாடு இல்லை. கலைக் கல்லூரிகளில் நன்கொடைகள் மற்றும் சேர்க்கை செயல்முறையிலிருந்து அதிக சம்பாதிக்கக் கூடியவை. இதனால், கலைக் கல்லூரிகளின் வருவாய் எப்படியும்  உறுதிப்படுத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக பிரதிநிதிகள் இதுகுறித்த கேள்விகளுக்கு பதில் கூற விரும்பவில்லை.

பொறியியல் கல்லூரிகளை நடத்துவதில் அரசியல்வாதிகளின் பெரும் பங்கைக் கொண்டுள்ள ஒரு மாநிலத்தில், இந்த சூழ்நிலை எதிர்பார்த்த ஒன்று தான் ஓய்வுபெற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தெரிவித்த்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி,செயற்கையாக      தூண்டப்பட்டதாக தெரிவித்தார். "நீண்ட காலமாகவே, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளின் பின் சென்றோம் , விளைவு  அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாத நிறுவனத்திற்கு கூட AICTE அங்கீகாரம் அளித்தது," என்று அவர் கூறினார்.

அரசு ஆணை, எண்- 92 பற்றி கூறுகையில், இந்த ஆணை (GO)  எஸ்சி மற்றும் எஸ்.டி மாணவர்களுக்கு இலவச கல்வியை அளிக்க வழி செய்கிறது. இதன் மூலம் சம்பந்தபட்ட பொறியியல் நிறுவனங்கள் டிசிஇ-ன் மூலம் பணத்தை திருப்பிக் பெறுகின்றனர்.

பொறியியல் படிப்புகளுக்கான தேவை குறைந்து கொண்டிருந்தபோது, ​​GO-92 அரசு ஆணை செயற்கையான தேவையை உறபத்தி செய்ததாக நீதிபதி சந்த்ரு கூறுகிறார். “எஸ்சி மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளுக்கு கட்டாயமாக அழைக்கப்பட்டனர் … பல தலித் தலைவர்கள் (கூட) மாணவர்களை மூளைச்சலவை செய்தனர்…”

உயர்கல்வித் துறை தொடர்பான ஆய்வாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில்,பல பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை தொழில்துறைக்கு தயார்படுத்துவதற்கான முதலீட்டை செய்வதில்லை" கற்பிக்கப்படும் எழுபது சதவீத பாடத்திட்டங்கள் காலாவதியானவை, மேலும் கீழ் மட்டத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் பாடத்திட்டத்தை புதுப்பிக்கவோ அல்லது முதலீடு செய்யவோ மறுக்கின்றன," என்று அவர் கூறினார். கல்வி உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் மட்டும் தான் நிலைக்கும் என்றும் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.

College
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment