இந்தியாவில் 8,000 பள்ளிகளில் மாணவர்கள் இல்லை; 20,000 ஆசிரியர்களுக்குச் சம்பளம் - மத்திய கல்வி அமைச்சகம்

மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளின் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை தெலங்கானாவில் 2,245 என பதிவாகியுள்ளது, மத்தியப் பிரதேசத்தில் 463 பள்ளிகள் உள்ளது. தெலங்கானாவில் இந்தப் பள்ளிகளில் 1,016 ஆசிரியர்களும் மத்தியப் பிரதேசத்தில் 223 ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளின் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை தெலங்கானாவில் 2,245 என பதிவாகியுள்ளது, மத்தியப் பிரதேசத்தில் 463 பள்ளிகள் உள்ளது. தெலங்கானாவில் இந்தப் பள்ளிகளில் 1,016 ஆசிரியர்களும் மத்தியப் பிரதேசத்தில் 223 ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

author-image
WebDesk
New Update
school teachers no students payroll

இந்தியாவில் சுமார் 8,000 பள்ளிகளில் மாணவர்கள் இல்லை, ஆனால், 20,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், ஹரியானா, மகாராஷ்டிரா, கோவா, அசாம், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுராவில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளே இல்லை. Photograph: (image: AI Generated)

2024-25 கல்வியாண்டில் நாடு முழுவதும் சுமார் 8,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த மாணவர் இல்லாத பள்ளிகளில் மொத்தமாக 20,817 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

கல்வி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 7,993 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ளது. இது கடந்த ஆண்டு (2023-24) இருந்த 12,954 என்ற எண்ணிக்கையை விட 5,000 பள்ளிகள் குறைவாகும், அதாவது 38% குறைவு ஆகும்.

அதிகபட்ச மாணவர்கள் இல்லாத பள்ளிகள் கொண்ட முதல் 3 மாநிலங்கள்

மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கையில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது.

மாநிலம்    மாணவர் இல்லாத பள்ளிகள்    பணியிலுள்ள ஆசிரியர்கள்
மேற்கு வங்கம்    3,812    17,965
தெலங்கானா    2,245    1,016
மத்தியப் பிரதேசம்    463    223
Advertisment
Advertisements

இப்படி ஒரு விசித்திரமான நிலையில், மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 3,812 மாணவர்கள் இல்லாத பள்ளிகள் உள்ளன, இங்கு மட்டும் 17,965 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இரண்டாவது மாணவர்கள் இல்லாத அதிகபட்ச பள்ளிகள் எண்ணிக்கை தெலங்கானாவில் 2,245 பள்ளிகள் பதிவாகியுள்ளது, இந்த பள்ளிகளில் 1,016 ஆசிரியர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் 463 பள்ளிகள், 223 ஆசிரியர்கள் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 81 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை.

ஒரு மாணவர்கூட சேர்க்கை இல்லாத மாநிலங்கள்

ஹரியானா, மகாராஷ்டிரா, கோவா, அசாம், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய 9 மாநிலங்களிலும், புதுச்சேரி, லட்சத்தீவுகள், டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ள பள்ளிகள் எதுவும் இல்லை.

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

“பள்ளி கல்வி என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. எனவே, மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகள் குறித்துக் கவனம் செலுத்தி, பிரச்னையைத் தீர்க்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்காகச் சில மாநிலங்கள் சில பள்ளிகளை ஒன்றிணைத்துள்ளன” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் நிலை

நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் 33 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.

ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கையில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் உள்ளன.

இருப்பினும், ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளன.

ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 2022-23-ல் 1,18,190 ஆக இருந்தது, அது 2023-24ல் 1,10,971 ஆகக் குறைந்துள்ளது, இது சுமார் 6 சதவீதம் வீழ்ச்சியைக் குறிக்கிறது.

School Education

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: