NEET 2019 Answer Key to Release Before or on May 12: கடந்த 5ம் தேதி நடைபெற்ற நீட் 2019 தேர்வை, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) திறம்பட நடத்தி வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த தேர்வின் ஆன்சர் கீயை, வரும் 12ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக அதிகாரப்பூர்வ இணையதளமான https://ntaneet.nic.in வெளியிட உள்ளதாக NTA தெரிவித்துள்ளது.
ஆன்சர் கீ வெளியிடப்பட்ட பிறகு, மாணவர்கள் தாங்கள் அளித்த விடையுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். இதில் ஏதேனும் மாறுதல் இருப்பின், மாணவர்கள் ரூ.1000 செலுத்தி விண்ணப்பித்து தங்களது மதிப்பெண்ணில் ஏற்படும் தவறை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
ஆன்சர் கீயில், உண்மையிலேயே தவறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், NTA கல்வியாளர்களுடன் ஆலோசித்து அந்த ஆன்சர் கீயை மறுஆய்வு செய்து புதிய ஆன்சர் கீ வெளியிடப்படும். தேர்வு ரிசல்ட், புதிய ஆன்சர் கீ அடிப்படையில் தயாரிக்கப்படும்.
நீட் தேர்வில் உயிரியல் பிரிவு எளிமையாக இருந்தது ; இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு ரிசல்ட், வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியிடப்படுகிறது.
மருத்துவ படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர, நீட் தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம்.
நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை, 2017 மற்றும் கடந்தாண்டை போலேவ இருக்கும். இதில் எவ்வித மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என்று கல்வியாளர் துர்கேஷ் மங்கேஸ்கர் கூறியுள்ளார்.