NEET UG 2019 Exam Question Paper Pattern: நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி எனப்படும் என்.டி.ஏ வரும் மே 5, 2019 அன்று நீட் தேர்வை நடத்துகிறது. NEET UG 2019-க்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்து, இதற்கான ஹால் டிக்கெட்டுகளை ntaneet.nic.in தளத்தில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த ஹால் டிக்கெட்டுகளை ஏப்ரல் 15, 2019 முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிக்க விரும்புபவர்கள் கட்டாயம் இந்த நீட் 2019 தேர்வை எழுத வேண்டும்.
வினாத்தாள் பேட்டர்ன்
இதில் இயற்பியல், வேதியல், உயிரியல் என மூன்று பிரிவுகள் உள்ளன. இயற்பியல் மற்றும் வேதியலில் தலா 45 கேள்விகள், உயிரியலில் 90 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.
ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள். தவறான பதிலுக்கு நெகட்டிவ் மதிப்பெண் அளிக்கப்படும். இத்தேர்வை எழுத மொத்தம் 3 மணி நேரம் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியான நேரம் அளிக்கப்பட மாட்டாது. கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் 180 கேள்விகளுக்கான விடையையும் எழுத வேண்டும்.
அதோடு இது ஆன்லைன் தேர்வு அல்ல, ஆஃப்லைனில் பேப்பர் பேனா பயன்படுத்தி, ஓ.எம்.ஆர் ஷீட்டில் எழுதும் தேர்வாகும்.
சென்றாண்டின் கட் ஆஃப்
பொது பிரிவினர் மற்றும் இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு 50 சதவீதம், இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு 45 சதவீத மதிப்பெண்கள். 50 சதவீத மதிப்பெண்ணுக்கு கட் ஆஃப் 191.
கடந்தாண்டு மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு ஓ.பி.சி - 537, எஸ்.சி - 417, எஸ்.டி - 399 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அனைத்திந்திய இட ஒதுக்கீட்டில் வருபவர்கள் 550-க்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.