NTA NEET Result 2019 At ntaneet.nic.in: நீட் மாணவர்களுக்கு செல்போனில் ரிசல்ட் அனுப்பும் நடைமுறையை தேசிய தேர்வு முகமை கடைபிடித்திருக்கலாம். தேர்வு முடிவு வெளியாகும் வேளையில் இணையதளம் முடங்கி மாணவர்கள் அவஸ்தை அனுபவிப்பதற்கு அது முற்றுப்புள்ளி வைக்கும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு வழிகாட்டுகிறது.
நீட் தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இன்று (ஜூன் 5) நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்கிற அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று முதல் தேசிய தேர்வு முகமையில் அதிகாரபூர்வ இணையதளமான ntaneet.nic.in முடங்கியது.
NEET Exam Results 2019 Tamil Nadu- நீட் தேர்வு ரிசல்ட் 2019
NTA NEET Result 2019 At neet.nic.in: நீட் தேர்வு ரிசல்ட் இப்படி செய்யலாமே!
இதனால் நீட் தேர்வர்கள் முடிவை காண முடியாமல் அவஸ்தைப்பட்டனர். சிபிஎஸ்இ மூலமாக நடத்தப்பட்டு வந்த நீட் தேர்வை இந்த ஆண்டு முதன்முதலாக தேசிய தேர்வு முகமை நடத்தியிருக்கிறது. ரிசல்ட் வெளியிடுவதில் தேசிய தேர்வு முகமை தமிழக கல்வித் துறையை பின்பற்றலாம்.
NEET Exam Results 2019 Live: நீட் தேர்வு முடிவுகள் தொடர்பான உடனடி அப்டேட்களை காண க்ளிக் செய்யவும்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தலா 10 லட்சம் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி , பிளஸ் டூ தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு முடிவுகளை அரசு இணையதளத்தில் வெளியிடுவதுடன் உடனடியாக அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக ரிசல்டை அனுப்பி வைக்கிறது தமிழக கல்வித் துறை.
NTA Neet Result 2019: இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்: ஆன் லைனில் ‘செக்’ செய்வது எப்படி?
தேசிய தேர்வு முகமை இதை பின்பற்றினால் நீட் தேர்வர்களின் தவிப்பை தவிர்க்கலாம்.