நீட் தேர்வு: முக்கிய 'டாபிக்'கள், தயாராகும் வியூகங்கள் இங்கே!

NEET 2020 Notification: 2020 நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு நாளை (மார்ச்-27) வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் நீட் தேர்வு திட்டமிட்டபடி...

NEET UG 2020: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியிட இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுமா? இல்லையா? என்ற கேள்வி  தேர்வர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

2020 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு, நாளை வெளியிடப்படும்  என்றும்,மே மாதம்  மூன்றாம் தேதி தேர்வு நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று மே மாதத்திற்குள் கட்டுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள். இருப்பினும், இந்த விவகாரத்தில் உறுதியான தகவல் என்று எதுவுமே இல்லை.

இந்த ஆண்டு மொத்தம் 15,93,452 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் அதே வேளையில், மாணவர்கள் தேர்வுக்கும் தயாராக வேண்டிய சூழ்நிலை உள்ளது.

2020-ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான சில முக்கிய டிப்ஸ்களை இங்கே காணலாம்.

வித்ய மந்திர் நிர்வாக தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணு தத் ஷம்ரா கூறுகையில், “நீட் தேர்வில் சாதிக்க, தலைபுகளின் வெயிட்டேஜின் அடிப்படையில் சரியான நேரத்தை ஒடுக்குவது மிகவும் முக்கியம். கவனமாக வடிவமைக்கப்பட்ட ஸ்டடி மெட்டீரியல் (Study Material)  இங்குதான்  முக்கியத்துவம் பெறுகிறது. தேர்வர்கள் சரியான ஸ்டடி மெட்டீரியலைப்  பின்பற்ற வேண்டும்” என்றால்

மேலும், நீட் தேர்வுக்கு முக்கியமானதாக கருதப்படும்  தலைப்புகளின் பட்டியலையும் அவர் குறிப்பிட்டார் –

 • – வெப்ப இயக்கவியல் (Thermodynamics)
  – ஒளியியல் (Optics)
  – நவீன இயற்பியல் ( Modern Physics)
  – வேதியியற் பிணைப்பு (Chemical Bonding)
  – பி-பிளாக் கூறுகள் (P Block Elements)
 • – ஆல்கஹால், ஈதர், பீனால்
  – சமநிலை (Equilibrium)
  – செல் (Cell)
  – விலங்கு உடலியல் (Animal Physiology)
  –மார்பாலஜி (Morphology )
  –அனாட்டமி (Anatomy)
  – மரபியல் (Genetics)
  – மூலக்கூறு மரபணு (Molecular inheritance)

பயிற்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை  மூடப்பட்டால் கூட, ​​மாணவர்கள் மாக் டெஸ்டை நம்ப வேண்டும்.  உண்மையான தேர்வை போலவே, மாக் டெஸ்டை மாணவர்கள் கருத வேண்டும். அப்போது தான் உண்மையான நீட் தேர்வின் பொது நமது உடலும், உள்ளமும் ஒருங்கினைந்து செயல்படும். ஒவ்வொரு மாக் டெஸ்ட்க்குப் பின், நமது பதில்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.  எங்கே தவறு நடந்துள்ளன?  குறைபாடு எங்குள்ளது? நம்மிடம்  கருத்து தெளிவு இல்லையா? அல்லது நேர நிர்வாகம் இல்லையா?  போன்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும்.

2019 நீட் தேர்வுக்கு, மொத்தம் 15,19375 தேர்வர்கள்  விண்ணப்பம் செய்திருந்தனர். விண்ணப்பமாக வசூலிக்கப்பட்ட கட்டணம் மட்டும் ரூ .113 கோடி முதல் ரூ .221 கோடி வரை இருக்கும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டத்தால் கண்டரிந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close