நீட் தேர்வு ‘கட் ஆஃப்’ இந்த முறை எப்படி இருக்கும்?

பொது பிரிவு மாணவர்களுக்கு  குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்கள் 50 சதவீதமாகும்.

By: Updated: September 14, 2020, 09:24:41 PM

NEET Exam Expected cut-off : எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுஷ் உள்ளிட்ட மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்- ஆப் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமாய் வெளியிட இருக்கிறது. தேர்வில் தேர்ச்சிப்பெற்றதாக கருதப்படும் அடிப்படை மதிப்பெண்களே (குறைந்தபட்ச தகுதி விழுக்காடு) கட்-ஆப் என்று கருதப்படும்.

80,055 எம்பிபிஎஸ், 26,949 பி.டி.எஸ், 52,720 ஆயுஷ் இடங்களுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்றது.

பொது பிரிவு மாணவர்களுக்கு  குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்கள் 50 சதவீதமும், எஸ்சி / எஸ்டி / ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 40 சதவிகிதமாகவும் உள்ளன.

மேலும், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களும் குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும் . நீட் 2020 கட்-ஆப் மதிப்பெண் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

எதன் அடிப்படையில் கட்-ஆப் தீர்மானிக்கப்படுகிறது?  

– தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை

– மொத்த காலியிடங்கள்;

–  வினாத்தாளின்  கடின நிலை ;

– இட ஒதுக்கீடு

தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பு படி, நீட் கட்-ஆப் சதவீதம் என்பது, பிற தேர்வர்களை ஒப்பிடும் போது, ஒரு குறிப்பிட்ட தேர்வரின் செயல்திறன் விகிதம் குறித்த ஒப்பீட்டை  அளிக்கிறது.  அதே நேரத்தில், கட் ஆப் மதிப்பெண்கள் என்பது, அந்த ஒரு குறிப்பிட்ட தேர்வர்  மொத்த மதிப்பெண்ணில் பெற்ற அளவை வழங்குகிறது. கட்-ஆஃப் சதவீதமும், மதிப்பெண்களும் இட ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு வேறுபடுகின்றன.

கடந்த ஆண்டு கட்- ஆப் சதவீதம்/ மதிப்பெண்கள்  அட்டவணை : 

 

 

 

கீழ்கண்ட மருத்துவக் கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்கு, நீட் கட்-ஆஃப் மதிப்பெண்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது:

– அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில், 15 சதவீதம்  அகில இந்திய ஒதுக்கீட்டு

–  அரசு கல்லூரிகளில் 85 சதவீத மாநில அரசு ஒதுக்கீடு

–  சுயாட்சி அந்தஸ்து மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள்

– இஎஸ்ஐசி (ESIC ) மற்றும்  ஏஎப்எம்எஸ்   (AFMS ) நிறுவனங்கள்

– தனியார் உயர்க்கல்வி நிறுவனங்கள்

– எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர்  உயர்க் கல்வி நிறுவனங்கள்

தகுதி பட்டியல் அடிப்படையில், மருத்துவ ஆலோசனைக் குழு (எம்.சி.சி) 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள், அனைத்து சுயாதின / மத்திய பல்கலைக்கழகங்கள், இஎஸ்ஐசி மற்றும்  ஏஎப்எம்எஸ்   கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் நிறுவனங்கள் ஆகியவற்றில் சேருவதற்கான கவுன்சிலிங்கை நடத்துகிறது.

85 சதவீத மாநில ஒதுக்கீடு இடங்கள், தனியார் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை மாநில கவுன்சிலிங் குழு நடத்துகிறது.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,250 இடங்கள் உட்பட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில், இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Neet 2020 exam cut off marks neet exam expected cut off

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X