3 மாதங்கள் எஞ்சியுள்ளன, நீட் தேர்வுக்கு எப்படி தயாராவது?

NEET 2020 Preparation Tips: தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தாலும், உங்கள் வெற்றியை அதிகரிக்க இது சரியான நேரம்.

neet 2020, neet 2020 preparation
neet 2020, neet 2020 preparation

NEET 2020 Study Plan, Preparation Strategy : தேசிய சோதனை முகமை (என்.டி.ஏ) வரும் மே 3 ஆம் தேதி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) நடத்துகிறது.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மார்ச் 27 முதல் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தாலும், உங்கள் வெற்றியை அதிகரிக்க இது சரியான நேரம்.

எனவே, நீட் தேர்வுக்கான தயாரிப்பு குறிப்புகள் இங்கே.

1. தேர்வைப் புரிந்து கொள்ளுங்கள்: 15.94 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவ்வளவு போட்டி வாய்ந்த  தேர்வில் தேர்ச்சி பெற, நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை நாம் அறிந்திருக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு தயாராக A ‘டூ’ Z டிப்ஸ்

நீட் 2020 : நுழைவுத் தேர்வுக்கு ஈஸியா ரெடியாவது எப்படி?

நீட் தேர்வு: எவ்வாறு படிப்பது ? வல்லுனர்களின் பதில்கள் இங்கே

நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களை பிப்ரவரி மாதம்  நடுப்பகுதியில் முடித்து விடுங்கள். அப்போதுதான், நீட் தேர்வுக்கான ரிவிஷன் மற்றும் ஆண்டு வாரியத் தேர்வுக்கு நம்மால் போதுமான நேரம்  ஒதுக்கமுடியும். கடந்த ஆண்டு நீட் தேர்வு வினாத் தாள்களை புரட்டி பார்ப்பது மிகவும் அவசியமானது.

2. தினசரி அட்டவணையை உருவாக்குங்கள்:  எந்தவொரு நுழைவுத் தேர்வுக்கும் அட்டவணை முக்கியம். அதனின் மிக முக்கியம் போட்ட அட்டவனையை மனசாட்சிக்கு உட்பட்டு பின்தொடர்வது. தினசரி அட்டவணையை எப்படி உருவாக்குவது என்பதற்கு பொதுவான விதி எதுவும் இல்லை. எவ்வாறாயினும் ஒவ்வொரு நாளும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலுக்கு குறைந்தது இரண்டு மணிநேரத்தை அர்ப்பணியுங்கள். அதாவது, தேர்வர்கள் குறைந்தது  ஒவ்வொரு நாளும் ஆறு மணிநேரம் படிக்க வேண்டும்

3. நீட் தேர்வு மாக் டெஸ்ட் மிக முக்கியம் : நீட் தேர்வு அருகில் இருப்பதால் மாக் டெஸ்ட் எடுப்பதை அதிகரித்துக் கொள்ளுங்கள்.முதலாவதாக, பதினைந்து நாட்களுக்கு ஒரு மாக் டெஸ்ட்  என்ற கணக்கில் தொடங்கி, பிப்ரவரி இறுதியில் இருந்து ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு மாக் டெஸ்ட் என்று அதிகரித்துக் கொள்ளுங்கள்.

4. பாடத்த்திட்டங்களை எளிமையாக அணுகுங்கள் : உயிரியல் புத்தகம் பார்க்க பயமாக இருந்தாலும், பாடத் திட்டங்கள் அவ்வளவு விரிவானவை இல்லை என்பதை நீங்கள் படிக்கும் போது புரிந்திருக்கும். உயிரியல் பாடத்திட்டத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அத்தியாயங்களை ஐந்து மணி நேரத்தில் எளிதாக படித்துவிடலாம். வேதியியல் மற்றும் இயற்பியலில், ஒரு நாளைக்கு இரண்டு அத்தியாயங்களை உள்ளடக்குவது கடினம் என்றாலும், ஒரு அத்தியாயத்தை அழுத்தம் திருத்தமாக படித்துவிடுங்கள்.

5. நோட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் : நீட் தேர்வுக்கு தயாராகும் ஆரம்பத்தில் இருந்தே வேட்பாளர்கள் நோட்ஸ் எடுக்க வேண்டும். கடைசி நிமிட வாசிப்பை இது எளிதாக்கும்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Neet 2020 exam prepration tips

Next Story
சென்னை பலகலைக்கழகம் தேர்வு முடிவுகள் எப்போது? எதிர்பார்ப்பில் மாணவர்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com