Advertisment

நீட் தேர்வு ஒத்திவைக்க வேண்டும்: என்.ஆர்.ஐ பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

26 ஜுலை அன்று நடைபெற இருக்கும் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று தேர்வெழுதும் என்.ஆர்.ஐ மாணவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீட் தேர்வு ஒத்திவைக்க வேண்டும்: என்.ஆர்.ஐ பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

26 ஜுலை அன்று நடைபெற இருக்கும் நீட் தேர்வை கொரோனா வைரஸ் பெருந்தோற்றால் ஒத்தி வைக்க வேண்டும் என்று  தேர்வெழுதும் என்.ஆர்.ஐ மாணவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் நீட் தேர்வு மையங்களை  அமைத்திட வேண்டும் (அ) கொரோனா பெருந்தொற்று சூழலை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ஒத்தி வைப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்க  வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையே, நீட் தேர்வை ஏன் ஒத்திவைக்க வேண்டும்?  என்பதை எடுத்துரைக்கும் 16 புள்ளிகள் கொண்ட பட்டியலை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துக்கு இந்திய பெற்றோர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

மாணவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவல் அதிகளவு ஏற்படும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மாணவர்களின் உடல் நிலை, ஆன்லைன் வகுப்புள் மூலம் தேர்வுக்கு தயராக முடியாத சூழல்  போன்றவைகள்  முக்கிய காரணங்களாக கூறப்பட்டது.

முன்னதாக, இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக  சமூக ஊடகங்களிலும், பிற ஆதாரங்களிலும் வெளியான தகவல் போலியானது என தேசிய தேர்வு முகமை தெளிவுபடுத்தியது.

இதற்கிடையில், #StudentsLivesMatter # postponejeeneet2020, #HealthOverExams #HealthOverNEETjee உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

தேசியத் தேர்வு முகமையின் ஆளுகையின் கீழுள்ள, வரவிருக்கும் JEE மெயின் மற்றும் NEET போன்ற தேர்வுகளில் கலந்து கொள்வோர் மாதிரித் தேர்வுகளை எழுத வசதியாக தேசியத் தேர்வு முகமை நேஷனல் டெஸ்ட் அபியாஸ் எனும் செயலி வடிவமைத்தது.

JEE, NEET மற்றும் வரவிருக்கும் இதர போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை முழுவதும் தயார்படுத்திக் கொள்ள, நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் இந்தச் செயலியின் மூலம் உயர்தர மாதிரித் தேர்வுகளை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். தேர்வுகளை சுலபமாகப் பதிவிறக்கம் செய்து கொண்டு, அவற்றை இணையத் தொடர்பு இல்லாதபோதும் எழுதி, இணையத்துக்கான செலவையும் மிச்சப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment