Advertisment

நீட் 2020 : நுழைவுத் தேர்வுக்கு ஈஸியா ரெடியாவது எப்படி?

NEET 2020 Study Plan : நீட் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு மாணவர்கள் நிறைய முறை மாதிரி தேர்வுகளை எழுதி பழக வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீட் தேர்வு பாடத்திட்டம் மாற்றமா? என்ன சொல்கிறது என்.டி.ஏ

NEET 2020 Important Topics, Preparation Tips : இந்த ஆண்டு முதல் ஜிப்மெர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிகளில் படிப்பதற்கும் நீட் கட்டாயமாகிறது என்பதால் இந்த வருடம் நடைபெற இருக்கும் நீட் மிகவும் சவால் மிக்கதாகவும் போட்டிகள் வாய்ந்ததாகவும் இருக்கும். இந்த தேர்வில் வெற்றி பெற சில முக்கிய வழிமுறைகளை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.  3 மணி நேரம் நடைபெற இருக்கும் இந்த தேர்வு வருகின்ற மே மாதம் 3ம் தேதி பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. 180 கேள்விகளுக்கு 180 நிமிடங்களில் மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம் என்பது தான் கணக்கு. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் மற்றும் தவறான பதில்களுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.

Advertisment

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

முக்கியமான பாடப்பகுதிகள்

வித்யாமந்திர் க்ளாஸசின் இயக்குநர் சௌரப் குமார் இது குறித்து கூறுகையில்

இயற்பியலில் ஹீட், தெர்மோடைனமிக்ஸ், ஆப்டிக்ஸ், மற்றும் மார்டர் பிசிக்ஸ் ஆகியவை மிக முக்கியம்.  தாவரவியலில் மோர்ஃபோலஜி, அனட்டாமி, ஒளிச்சேர்க்கை, மரபியல், மூலக்கூறு அறிவியல் ஆகியவை மிக முக்கியம். வேதியலில் : ஆல்கஹால், எத்தர், ஐயோனிக் ஈகுலிப்ரியம், தெர்மோ டைனமிக்ஸ், கெமிக்கல் பாண்டிங், பீரியோடிக் ப்ரோபெர்ட்டீஸ், பி ப்ளாக் எலெமெண்ட்ஸ் ஆகியவை முக்கியமான பாடப்பிரிவுகளாக மேற்கோள்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு முதல் எய்ம்ஸும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் கடுமையான போட்டிகள் நிலவக்கூடும். அனைத்து வருடமும் இருக்கும் கட்-ஆஃப்பைக் காட்டிலும் கூடுதலான கட்-ஆஃப் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் எவ்வாறு இந்த தேர்வுகளுக்கு தயாரிகின்றாரோ அது தான் முக்கியம் என்றும் குமார் கூறியுள்ளார்.

Physics the deciding factor

பிப்ரவரி மாதம் தான் தேர்வு என்பதால் மாணவர்களுக்கு மே மாதம் வை தங்களை தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்ள நிறைய நேரம் இருக்கின்றது. முதலில் மிகவும் எளிமையான பாடப்பிரிவுகளில் இருந்து நம்பிக்கையுடன் படிக்க துவங்க வேண்டும். இயற்பியல் தான் இருப்பதிலே மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் வேதியல் மற்றும் உயிரியலில் உள்ள பாடப்பிரிவுகளை பிரச்சனைகள் ஏதுமின்றி கற்றுக் கொள்கின்றனர். இயற்பியல் தான் டிசைடிங் ஃபேக்டராக இருக்கிறது.

வேதியல், தாவரவியல், மற்றும் விலங்கியலில் என்.சி.ஈ.ஆர்.டி பாடப்பிரிவுகள் மிகவும் முக்கியம். பிப்ரவரி மாதம் முடிவடைவதற்குள் என்.சி.ஈ.ஆர்.டி பகுதிகளை படித்து விட வேண்டும். ஆவற்றில் தான் அதிகப்படியான விளக்கங்களுடன் கூடிய விடைகள் இருக்கிறது. ஒரு கேள்விக்கு ஒரே நிமிடம் தான் வழங்கப்படுவதால் கேள்வியை மிகவும் தெளிவாக படித்துவிட்டு பதில் அளிக்க வேண்டும்.

publive-image

நீட் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு மாணவர்கள் நிறைய முறை மாதிரி தேர்வுகளை எழுதி பழக வேண்டும்.  இப்படி செய்யும் போது தான் எவ்வளவு நேரத்தில் ஒரு வினாத்தாளை ஒரு மாணவரால் முடிக்க இயலும் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றபடி மாற்றங்களை கொண்டு வந்து விரைவாக தேர்வுகளை எழுத இயலும். தேர்வுகளுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன்பில் இருந்தே மாணவர்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு கண் இருக்க வேண்டும். தேர்வுகளுக்கு முன்பு நிறைய ஆண்ட்டி ஆக்ஸிடெண்ட்ஸ் உணவுகளை உண்ண வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களை உண்பதை தவிர்க்க வேண்டும்.

publive-image

ஜூன் 4ம் தேதி இந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு முடிக்கும் மாணவர்கள் கவுன்சிலிங்க் முறையில் மருத்துவம் படிக்க அனுமதிப்பார்கள். இந்த ஆண்டு மொத்தம் 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எதிர் கொள்ள உள்ளனர். 2018ம் ஆண்டு 13 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதியது குறிப்பிடத்தக்கது.

publive-image

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment