நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை அறிய என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்தை neet.nta.nic.in. அவ்வப்போது பார்வையிட விண்ணப்பத்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் விண்ணப்பத்தார்கள் பேஸ் 1 மற்றும் பேஸ் 2 விண்ணப்ப பதிவுகளில் குறிப்பிட்டுள்ள மெயில் ஐடியை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க என்டிஏ அறிவுறுத்தியிருந்தது. ஏனென்றால், விண்ணப்பத்தாரரின் மெயில் ஐடிக்கு தான் நீட் தேர்வு ஸ்கோர் கார்டு அனுப்பப்படவுள்ளது.
நீட் ஆன்சர் கீ
பல நாள்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நீட் தேர்வின் ஆன்சர் கீ, அக்டோபர் 15 ஆம் தேதி வெளியானது. விண்ணப்பதாரர்கள் என்டிஏ தளத்தில், ஆன்சர் கீயை பதிவிறக்கம் செய்து, நீட் தேர்வின் உத்தேச மார்க்கை கணக்கிட முடியும்.
நீட் ஆன்சர் கீ விடைகள் மீது இன்று(அக்டோபர்-17) இரவு 9 மணிக்குள் கேள்வி எழுப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டண தொகை 1000 ரூபாய் செலுத்தி வேண்டும். அவை திரும்ப அளிக்கப்படாது. அத்துடன் கூடுதலாக, நீட் தேர்வில் மாணவர்களின் விடைத்தாள் நகலை பெற்றுக்கொள்ளலாம். அதிலிருக்கும் பதில் மாறுப்பட்டு இருந்தாலோ அல்லது தவறாக இருந்தாலோ ஒரு கேள்விக்கு 200 ரூபாய் ஆன்லைனில் செலுத்தி கேள்வி எழுப்பலாம். இந்த வசதியானது, அக்டோபர் 17 இரவு 9 மணி வரை உபயோகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிஏ கூற்றுப்படி, " விண்ணப்பத்தார்கள் எழுப்பும் கேள்விகளை, அதிகாரிகள் குழு பரிசீலினை செய்வார்கள். அவை சரியாக இருக்கும் பட்சத்தில், ஆன்சர் கீயில் மாற்றம் செய்யப்பட்டு, பைனல் ஆன்சர் கீ வெளியிடப்படும். நீங்கள் எழுப்பிய கேள்வி ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது விண்ணப்பதார்களுக்கு தெரிவிக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் 2021 ஆன்சர் கீ டவுன்லோடு செய்யும் வழிமுறைகள்
முதலில் என்டிஏ neet.nta.nic.in தளத்திற்கு செல்ல வேண்டும்
அங்கு ஆன்சர் கீ கிளிக் செய்ய வேண்டும்
லாகின் செய்வதற்கான தகவல்களை பதிவிட வேண்டும்.
ஆன்சர் கீ மற்றும் விடைத்தாள் நகல் திரையில் தோன்றும்.
அவை இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து, உத்தேச மதிப்பெண்ணை கணக்கிடலாம்
ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், கேள்வி எழுப்பலாம்.