நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. அதன் ஆன்சர் கீ விரைவில் தேசிய தேர்வுகள் முகமையால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தேதி வெளியாகவில்லை. என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளமான neet.nta.nic.in இல் ஆன்சர் கீ வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள் அதிலிருக்கும் பதில்கள் குறித்துத் தகுந்த விளக்கத்துடன் கேள்வி எழுப்பலாம். ஆனால், அதற்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
என்டிஏ நீட் ஆன்சர் கீயுடன் சேர்த்து, நீட் OMR responce sheet வெளியிடும். அதனை கண்டிப்பாக விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதிலிருக்கும் பதில்களை ஆன்சர் கீயுடன் ஒப்பிட்டு மதிப்பெண்ணைக் கணக்கிடலாம். ஒருவேளை OMR response sheetஇல் நீங்கள் அளித்திருந்த பதில் தவறாக இடம்பெற்றிருந்தால், ஆன்லைன் வாயிலாக ரூபாய் 200 செலுத்தி கேள்வி எழுப்பலாம்.
அந்த கோரிக்கை சரியென் என்டிஏ ஏற்றுக்கொண்டாலும், கோரிக்கைக்கான உங்களது கட்டண தொகை திரும்ப அளிக்கப்படாது. இதுதொடர்பான கூடுதல் தகவலை என்டிஏ தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
நீட் கட்ஆஃப் மார்க் வைத்து, எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை, விண்ணப்பதாரர்கள் கண்டறிய முடியும்.
நீட் ஆன்சர் கீ டவுன்லோடு வழிமுறை
step 1: neet.nta.nic.in அதிகாரப்பூர்வ தளத்திற்கு முதலில் செல்ல வேண்டும்
step 2: ஆன்சர் கீ பெறும் லிங்க் கிளிக் செய்ய வேண்டும்
step 3: லாகின் செய்திட தேவையான தகவல்களை பதிவிட வேண்டும்
step 4: தற்போது, நீட் ஆன்சர் கீ திரையில் தோன்றும். தேவைப்படுவோர் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
நீட் 2021 மார்க் மதிப்பீடு முறை
நீட் 2021 இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகியவற்றை குறித்து 180 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதில், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகளில் தலா 45 கேள்விகளும், உயிரியல் பிரிவில் 90 கேள்விகளும் இருக்கும். நீட் 2021 க்கான மொத்த மதிப்பெண்கள் 720.
நீட் கவுன்சிலிங்கில் பங்கேற்க நீட் கட்ஆஃப் மதிப்பெண் அவசியம். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். தவறான விடைக்கு, ஒரு மார்க் மைனஸ் செய்திட வேண்டும். கேள்விக்கு விடையளிக்கவில்லை என கூறி எவ்வித மார்க் குறைக்கப்படாது.
நீட் மார்க் அறிய இந்த பார்முலா மிகவும் உபயோகமாக இருக்கும். நீட் 2021 மதிப்பெண் = (சரியான விடை * 4) - (தவறான விடை* 1)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil