கொரோனாவால் கடந்தாண்டு ஒதுக்கிவைக்கப்பட்ட நீட் தேர்வு, இந்தாண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 16.10 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், நீட் தேர்வின் ஆன்சர் கீ விரைவில் வெளியாகவுள்ளது. அதனை neet.nta.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. இருப்பினும், ஆன்சர் கீ வெளியீட்டின் அதிகாரப்பூர்வ தேதி வெளியாகவில்லை
என்டிஏ, மொத்தமாக 1 முதல் 6 சீரிஸ்களில் M,N,O,P என்ற குறியீட்டை கொண்ட தேர்வு தாள்களின் ஆன்சர் கீயை வெளியிடும்.
விண்ணப்பதாரர்கள், neet.nta.nic.in என்ற இணையதளத்தில், அப்லிகேஷன் நம்பரையும், பாஸ்வார்டையும் பதிவிட்டு ஆன்சிர் கீயை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
என்டிஏ வெளியீடும் ஆன்சர் கீ டவுன்லோடு செய்வது எப்படி?
step 1: என்டிஏ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in செல்ல வேண்டும்.
step 2: அதில் "NEET UG Answer key 2021" என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
step 3: ஆன்சர் கீயை பிடிஎஃப் பார்மட்டில் காண முடியும்.
step 4: உங்களின் விடையுடன் ஆன்சர் கீயை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்.
step 5: தேவைப்பட்டால் ஆன்சர் கீயை டவுன்லோடு செய்துகொள்ளலாம்
மார்க் மதிப்பிடுவது எப்படி?
நீட் மார்க்கை மதிப்பிட கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிதான பார்முலாவை பின்பற்றுங்கள்
நீட் மார்க்= சரியான விடை*4 - தவறான விடை* 1
எளிதாகச் சொல்லவேண்டுமென்றால், மதிப்பெண்ணை அறிய சரியான மற்றும் தவறான பதிலை முதலில் எண்ண வேண்டும். பின்னர், ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் கணக்கிடுங்கள். அதே சமயம், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண்ணை மைனஸ் செய்யுங்கள்.
ஆன்சர் கீயில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், தேர்வு எழுதியவர்கள் எனடிஏ இணையதளம் வாயிலாக தேர்வாணையத்தை சேலஞ்ச் செய்யலாம். குறிப்பிட்ட கேள்விக்கு, விரிவான பதிலுடன் அவர்களுக்கு அனுப்ப வேண்டும். இந்த செயல்முறைக்கு ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். சேலஞ்ச் செய்தவரின் பதில் சரியாக இருக்கும் பட்சத்தில், அந்த விடை ஆன்சர் கீயில் திருத்தப்பட்டு பைனல் கீ என்டிஏ தளத்தில் வெளியிடப்படும்.
நீட் ஆன்சர் கீயின் பைனஸ் பதிப்பு வெளியாகும் போது, தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தொடர்பான கூடுதல் தகவல்களை nta.ac.in அல்லது neet.nta.nic ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.