நீட் தேர்வு முடிவுகள் நவம்பர் 1 ஆம் தேதி வெளியானது. லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் இளங்கலை மருத்துவ மாணவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதிக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். விரைவில் எம்சிசி தளத்தில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், அஸ்ஸாம், பஞ்சாப், அருணாச்சல பிரதேச மாநிலங்கள் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கு மாநில ஒதுக்கீடுக்கான சேர்க்கை கவுன்சிலிங்கை தொடங்கியுள்ளது. ஓடிசாவும் கலந்தாய்வை நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நீட் கவுன்சிலிங் குறித்த அறிய விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாநிலங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்வையிடுவது அவசியமாகும். அவை பின்வருமாறு:
- ஆந்திரா - ntruhs.ap.nic.in
- அருணாச்சல் பிரதேஷ் - apdhte.nic.in
- அஸ்ஸாம் - dme.assam.gov.in
- பிகார் - bceceboard.bihar.gov.in
- சண்டிகர் - gmch.gov.in
- சத்தீஸ்கர் - cgdme.in
- கோவா - dte.goa.gov.in
- குஜராத் - medadmgujarat.org
- ஹரியானா - dmer.haryana.gov.in
- ஹிமாச்சல் பிரதேஷ் - hpushimla.in
- ஜம்மு காஷ்மீர் - jkbopee.gov.in
- ஜார்க்கண்ட் - jceceb.jharkhand.gov.in
- கர்நாடகா - kea.kar.nic.in
- கேரளா - cee.kerala.gov.in
- மத்திய பிரதேசம் - dme.mponline.gov.in
- மகாராஷ்டிரா - cetcell.mahacet.org
- மணிப்பூர் - manipurhealthdirectorate.mn.gov.in
- மேகாலயா - meghealth.gov.in
- மிசோரம் - mc.mizoram.gov.in
- நாகலாந்து - dtenagaland.org.in
- ஓரிசா - ojee.nic.in
- புதுச்சேரி - centacpuducherry.in
- பஞ்சாப் - bfuhs.ac.in
- ராஜஸ்தான் - education.rajasthan.gov.in
- தமிழ்நாடு - tnmedicalselection.net
- தெலங்கானா - knruhs.telangana.gov.in
- திரிபுரா - dme.tripura.gov.in
- உத்தரப் பிரதேசம் - upneet.gov.in
- உத்தரக்கண்ட் - hnbumu.ac.in
- மேற்கு வங்கம் - wbmcc.nic.in
85% மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாநிலங்களில் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்வையிட்டு, அறிவிக்கப்பட்ட தேதியில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil