விரைவில் நீட் 2021 கவுன்சிலிங்… டாப் 10 மருத்துவக் கல்லூரி தெரிஞ்சுக்கோங்க!

இந்தாண்டு NIRF தரவரிசையில் இடம்பிடித்த டாப் 10 மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளின் விவரங்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் விரைவில் தொடங்கவுள்ளது. 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.

நீட் கவுன்சிலிங்கில் சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது விண்ணப்பதாரர்களுக்குச் சவாலான பணியாக இருக்கும். அதற்கான விடையை இச்செய்தி தொகுப்பில் காணலாம். மத்திய கல்வித் துறை ஆண்டுதோறும் என்ஐஆர்எஃப் தரவரிசை வெளியிடும்.

அதன்படி, இந்தாண்டு NIRF தரவரிசையில் இடம்பிடித்த டாப் 10 மருத்துவ கல்லூரிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 1. எய்ம்ஸ், டெல்லி
 2. முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) சண்டிகர்
 3. கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர்
 4. தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம்( NIMHANS), பெங்களூர்
 5. சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம், லக்னோ
 6. அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை
 7. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
 8. ஜிம்பர், புதுச்சேரி
 9. கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி, லக்னோ
 10. கஸ்துார்பா மருத்துவக் கல்லூரி, மணிபால்

NIRF 2021 இன் சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல்

 1. மணிபால் பல் மருத்துவக் கல்லூரி, உடுப்பி
 2. டி ஒய் பாட்டீல் வித்யாபீத், புனே
 3. சவீதா பல் மருத்துவக் கல்லூரி, சென்னை
 4. மௌலானா ஆசாத் பல் மருத்துவ அறிவியல் நிறுவனம், டெல்லி
 5. கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம், லக்னோ
 6. ஏ.பி ஷெட்டி மெமோரியல் பல் மருத்துவ கல்லூரி, மங்களூரு
 7. மணிபால் பல் மருத்துவக் கல்லூரி, மங்களூரு
 8. ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
 9. SDM பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, தார்வாட்
 10. எஸ்ஆர்எம் பல் மருத்துவக் கல்லூரி, சென்னை

நீட் கவுன்சிலிங் பிராசஸில் ரெஜிஸ்ட்ரேஷன், பணம் செலுத்தல், விருப்ப கல்லூரி தேர்ந்தெடுத்தல், கல்லூரி முடிவு செய்தல், இருக்கை ஒதுக்கீடு, சம்பந்தப்பட்ட கல்லூரியில் ரிப்போட் செய்வது ஆகியவை அடங்கும். நீட் தேர்வு முடிவுகள் நவம்பர் 1 ஆம் தேதி வெளியாகின.

சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில், 8 லட்சத்து 70 ஆயிரத்து 74 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 3 மாணவர்கள், 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Neet 2021 counselling start soon check top medical and dental colleges

Next Story
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express