Advertisment

நீட் 2021: கட்ஆஃப், பேஸ் 2 பதிவு, டை பிரேக்கிங் பிராசஸ்; முழு விவரம் இதோ..

நீட் பேஸ் 2 பதிவை ரெஜிஸ்டர் செய்யாதோர்களின், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
நீட் 2021: கட்ஆஃப், பேஸ் 2 பதிவு, டை பிரேக்கிங் பிராசஸ்; முழு விவரம் இதோ..

நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. தேசிய தேர்வுகள் முகமை, விரைவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியாகுவதற்கு முன்பு, என்டிஏ தளத்தில் ஆன்சர் கீ பதிவேற்றம் செய்யப்படும். மாணவர்கள் அதனை உபயோகித்து உத்தேச மதிப்பெண்ணைக் கணக்கிட முடியும். கட்ஆஃப் மார்க் மூலம் கவுன்சிலிங்கில் எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

Advertisment

மேலும், ரிசல்ட் வெளியாகுவதற்கு முன்பு, பேஸ் 2 ரெஜிஸ்டர் பிராசஸ் தொடங்கும். அதனை மாணவர்கள் கண்டிப்பாக ரிசல்ட் வருவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும். நீட் ரிசலட் பார்ப்பதற்கு ஸ்கார்கார்ட் போன்று தான் இருக்கும். அதில், மொத்த மதிப்பெண், சதவிகித மார்க், கட் ஆஃப், தரவரிசை உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெற்றிருக்கும். 

விண்ணப்பத்தார்கள் தங்களது அப்லிகேஷன் நம்பர் மற்றும் பாஸ்வேர்ட் உபயோகித்து நீட் ரிசல்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

நீங்கள் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையாக கொண்டு தான், உங்களது சதவிகித மார்க் கணக்கிடப்படும். அவை குறிப்பிட்ட கல்லூரியில் உங்களது பிரிவில் இடம் கிடைக்கும் என்பதை கண்டறிய உதவியாக இருக்கும்.  பொதுபிரிவு 50 %, எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவு 40%,பொது பிரிவு (ph)45%,எஸ்சி,எஸ்.டி,ஓபிசி (ph)40% ஆகும்

நீட் 2021 மார்க் மதிப்பீடு முறை

நீட் 2021 இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகியவற்றை குறித்து 180 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதில், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகளில் தலா 45 கேள்விகளும், உயிரியல் பிரிவில் 90 கேள்விகளும் இருக்கும். நீட் 2021 க்கான மொத்த மதிப்பெண்கள் 720.நீட் கவுன்சிலிங்கில் பங்கேற்க நீட் கட்ஆஃப் மதிப்பெண் அவசியம். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். தவறான விடைக்கு, ஒரு மார்க் மைனஸ் செய்திட வேண்டும். கேள்விக்கு விடையளிக்கவில்லை என கூறி எவ்வித மார்க் குறைக்கப்படாது.



டை பிரேக்கிங் ஃபார்முலா(Tie Breaking Formula)

மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், அவர்களை தரவரிசைப்படுத்த டை பிரேக்கிங் பார்முலா பின்பற்றப்படுகிறது. முதன்முறையாக, இந்தாண்டு டை பிரேக்கிங்கில் விண்ணப்பதாரரின் வயது ஒரு காரணியாக கருதப்பட்டு வந்தது நீக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றால், அவர்களது மார்க்கை முடிவு செய்ய டை பிரேக்கிங் ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது.

உயிரியலில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அப்போதும், டை நீடித்ததால், அடுத்ததால் வேதியியலில் அதிக மதிப்பெண் கணக்கிடப்படும். அப்போதும் மார்க் டையாகும் பட்சத்தில், அனைத்து தேர்விலும் குறைவான அளவில் தவறான விடைகளை எழுதியவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர். 



பேஸ் 2 பதிவு கட்டாயம்

தேர்வு முடிவுகள் வெளியாகுவதற்கு முன்பு, விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வின் இரண்டு கட்ட ரெஜிஸ்ட்ரேஷன் பிராசஸை கட்டாயம் முடித்திட வேண்டும். மாணவர்கள் தங்கள் தரவை விரைவாகச் சமர்ப்பிக்க உதவுவதற்காக, இந்தாண்டு ரெஜிஸ்டர் செயல்முறை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் பதிவின் போது நிரப்பப்பட வேண்டிய விவரங்களை மாணவர்கள் என்டிஏயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். பேஸ் 2 ரெஜிஸ்டர், நீட் ஆன்சர் கீ வெளியானதும் தொங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பு: நீட் பேஸ் 2 பதிவை ரெஜிஸ்டர் செய்யாதோர்களின், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



நீட் என்பது இந்தியாவில் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் B.V.Sc மற்றும் AH கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வாகும். நீட் தேர்வு முடிவுகளுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இருப்பினும், அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment