நீட் 2021 தேர்வு முடிவுகள் விரைவில் என்டிஏ தளத்தில் வெளியிடப்படவுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிd மும்பை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் தேர்வு முடிவு வெளியாகலாம் என லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள், என்டிஏ அதிகாரப்பூர்வ தளத்தில் neet.nta.nic.in காணலாம்.
தேர்வு முடிவுகள் ஸ்கோர் கார்ட் பார்மட்டில் வெளியாகவுள்ளது. அதில், கட்ஆஃப் மார்க், கட்ஆஃப் விகிதம், அகில இந்திய தரவரிசை பட்டியல் ஆகியவை இடம்பெறும். தரவரிசை பட்டியல் அடிப்படையில் தான், நீட் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.
15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.
நீட் தேர்வின் பைனல் ஆன்சர் கீ வெளியான சில மணி நேரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டை பிரேக்கிங் ஃபார்முலா(Tie Breaking Formula)
மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், அவர்களை தரவரிசைப்படுத்த டை பிரேக்கிங் பார்முலா பின்பற்றப்படுகிறது. முதன்முறையாக, இந்தாண்டு டை பிரேக்கிங்கில் விண்ணப்பதாரரின் வயது ஒரு காரணியாக கருதப்பட்டு வந்தது நீக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றால், அவர்களது மார்க்கை முடிவு செய்ய டை பிரேக்கிங் ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது.
உயிரியலில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அப்போதும், டை நீடித்ததால், அடுத்ததால் வேதியியலில் அதிக மதிப்பெண் கணக்கிடப்படும். அப்போதும் மார்க் டையாகும் பட்சத்தில், அனைத்து தேர்விலும் குறைவான அளவில் தவறான விடைகளை எழுதியவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil