தேசிய தேர்வு முகமை (NTA) நீட் 2021ம் ஆண்டு தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை அக்டோபர் 21 முதல் 26 வரை ஆன்லைனில் மீண்டும் திறந்துள்ளது. அதே நேரத்தில், நீட் தேர்வு முடிவு 2021 அக்டோபர் 26க்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Advertisment
மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக் குழு 15% அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) மற்றும் 85% மாநில கவுன்சிலிங் மூலம் மருத்துவப் படிப்பில் சேர விரும்புபவர்களுக்கான சேர்க்கை செயல்முறையை நடத்துகிறது. 15% அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம், மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த கல்லூரியிலும் சேர்க்கை பெற முடியும். அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மாநில கல்லூரியில் சேர்க்கைக்கு தனி மாநில கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மருத்துவப் படிப்பில், மாநில கவுன்சிலிங் மூலம், ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் 85% இடங்களும், அனைத்து தனியார் கல்லூரிகளில் 100% இடங்களும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கிடைக்கின்றன. இந்த கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேருவதற்குத் தேவையான மதிப்பெண்கள் குறித்த யோசனையைப் பெற தமிழ்நாடு கல்லூரிகளின் நீட் கட்-ஆஃப்கள் குறித்த கடந்த ஆண்டு தரவுகள் இங்கே மாணவர்களுக்காக கொடுக்கப்படுகிறது.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான அதிகபட்ச நீட் கட்-ஆஃப் கடந்த ஆண்டு சென்னை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் 93 மதிப்பெண் ஆக இருந்தது.
நீட் 2021: தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளின் கடந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண்:
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”