/indian-express-tamil/media/media_files/PcBiJl3Hgvw0VemBCip7.jpg)
Neet 2024 Hall ticket download
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைகான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG 2024) ஹால் டிக்கெட்டை மே 1ஆம் தேதி தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்தியாவில் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு மே 5-ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் 011-40759000 என்ற எண்ணிலோ அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.