நீட் யூஜி 2025 தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களா நீங்க? உங்களுக்கான அட்மிட் கார்டு இப்பொழுது வெளியிடப்பட்டிருக்கு. இந்த அட்மிட் கார்டை நிரப்பும்போதும், தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லும்போதும் நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள் இருக்கு. தொடர்ந்து படிங்க!
Advertisment
முக்கியமா, உங்க அட்மிட் கார்டை குறைந்தது மூன்று அல்லது நான்கு நகல்கள் எடுத்து வச்சுக்கோங்க. நீங்க தேர்வு அறைக்கு ஒரு நகல் மட்டும்தான் எடுத்துட்டுப் போகப் போறீங்க. ஆனா, உங்ககிட்ட வீட்ல குறைஞ்சது இரண்டு நகல்களாவது இருக்கணும்.
அதுல ஒரு நகலை நீங்க வீட்ல இருந்து தேர்வு அறைக்கு போகும்போது முழுசா நிரப்பி எடுத்துட்டுப் போகணும். முதல் பக்கத்துல உங்க பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை ஒட்டிடுங்க. அதுக்கப்புறம் உங்க இடது கை கட்டைவிரல் ரேகையை வச்சிருங்க. இரண்டாவது பக்கத்துல ஒரு போஸ்ட் கார்ட் சைஸ் போட்டோவை ஒட்டணும். அவ்ளோதான்! நீங்க தேர்வு மையத்துல, தேர்வு அறைக்குள்ள இருக்கிற கண்காணிப்பாளர் முன்னாடிதான் கையெழுத்து போடணும். இந்த விஷயங்களை நல்லா புரிஞ்சுக்கோங்க.
நீங்க எந்த அட்மிட் கார்டை தேர்வு மையத்துக்கு எடுத்துட்டுப் போறீங்களோ, அதை அங்க இருக்கிற கண்காணிப்பாளர்ட்ட கொடுத்துட்டு வந்துடுவீங்க. அதனாலதான், அட்மிட் கார்டோட நகல் உங்ககிட்ட வீட்ல இருக்கணும். அதே மாதிரி, அட்மிட் கார்டை ரெண்டு பக்கமும் சேர்த்து (Back to back) பிரிண்ட் எடுக்காதீங்க. நீங்க போடுற கையெழுத்து எல்லாமே தேர்வு மையத்துலதான் போடணும். வீட்லயே போட்டுறாதீங்க. இவ்வளவு முக்கியமான விஷயங்கள் இருக்கும்போது, தனித்தனி பேப்பர்ல பிரிண்ட் எடுத்துட்டுப் போறதுதான் ரொம்ப நல்லது.
Advertisment
Advertisements
பொதுவா தேர்வு மையத்துல நிறைய மாணவர்கள் கலர் பிரிண்ட் அவுட் வச்சிருப்பாங்க. நீங்க மட்டும் கருப்பு வெள்ளை பிரிண்ட் அவுட் வச்சிருந்தா உங்களை உள்ள விடுவாங்களா மாட்டாங்களான்னு ஒரு தேவையில்லாத பயம் உங்களுக்கு வரலாம். அதனால முடிஞ்ச வரைக்கும் கலர் பிரிண்ட் எடுத்துக்கோங்க.
என்னோட அட்மிட் கார்டுல ஐடி ப்ரூஃப் ரேஷன் கார்டுன்னு இருக்கு அல்லது பாஸ்போர்ட்ன்னு இருக்குறதுனால நான் ஆதார் கார்டு எடுத்துட்டுப் போக மாட்டேன்னு சொல்லக்கூடாது. உங்க ஒரிஜினல் ஆதார் ஐடியை எடுத்துட்டுப் போகணும்ங்கிறதை மட்டும் மறந்துடவே மறந்துடாதீங்க.
அதேபோல, தேர்வு அறைக்கு போகும்போது எக்ஸ்ட்ரா பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்னு எடுத்துட்டுப் போக மறந்துடாதீங்க. ஏன்னா, முதல் பக்கத்துல ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும், ரெண்டாவது பக்கத்துல ஒரு போஸ்ட் கார்ட் சைஸ் போட்டோவும் ஒட்டணும். நீங்க ஒரு லிட்டர் தண்ணி பாட்டில் எடுத்துட்டுப் போகலாம். உடல் ஊனமுற்ற மாணவர்கள் இருந்தா, அதுக்கான சான்றிதழையும் சேர்த்து எடுத்து வச்சுக்கோங்க.