தேசிய மருத்துவ ஆணையத்தின் படி, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 485 இளங்கலை (எம்.பி.பி.எஸ்) மற்றும் 247 முதுகலை (பி.ஜி) மருத்துவ இடங்கள் தற்போது காலியாக உள்ளன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் இன்று ராஜ்யசபாவிற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: NEET: 485 UG, 247 PG medical seats vacant in 2023, Minister tells Rajya Sabha
நடப்பு கல்வி அமர்வில் காலியாக உள்ள இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு காரணங்களுடன் அமைச்சர் பதிலளித்தார்.
முதுநிலைப் பட்டதாரிக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET PG) சதவீதம் முதல் முறையாக பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினர் பெற்ற மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பொதுப் பிரிவினர் மருத்துவத்தில் முதுகலை படிப்புகளில் சேருகிறார்களா, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இடங்களைப் பெறுகிறார்களா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
உச்ச நீதிமன்றம் வகுத்த திட்டத்தின்படி மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் யு.ஜி மற்றும் நீட் பி.ஜி கவுன்சிலிங்கை சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் (DGHS) மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) நிர்வகிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். காலியாக உள்ள இடங்களை நிரப்ப முதுகலை படிப்புகளின் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண் சதவீதம் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டது, எனவே NEET-PG தேர்வில் பங்கேற்ற ஒவ்வொரு விண்ணப்பதாரரும் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இடங்களை நிரப்புவதற்காக நடப்பு கல்வியாண்டில் முதுகலை கவுன்சிலிங்கிற்கு சிறப்பு காலியிட சுற்றுகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக அரசாங்கத்தால் பகிரப்பட்ட தரவுகளின்படி, 2023 கல்வி அமர்வுக்கு நாட்டில் 1,01,043 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 65,335 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“