NTA NEET admit card 2019 to release today: நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி எனப்படும் NTA, நீட் தேர்வுக்கான (NEET) ஹால் டிக்கெட்டை இன்று வெளியிட்டது. நாடு முழுவதும் இதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.
இதனை அதிகாரப்பூர்வ தளமான ntaneet.nic.in தளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மருத்துவ படிப்பிற்கான இந்த நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெறுகிறது.
போன வருடம் 13 லட்சம் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த வருடம் 15 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
How to download your NEET 2019 admit card: எப்படி பதிவிறக்கம் செய்வது?
ஸ்டெப் 1 - அதிகாரப்பூர்வ தளமான ntaneet.nic.in -ஐ விசிட் செய்யவும்.
ஸ்டெப் 2 - அங்கு இருக்கும் 'download admit card’ என்பதை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 3 - இப்போது புதிய பக்கம் திறக்கும்.
ஸ்டெப் 4 - பதிவெண்ணைக் கொண்டு லாக் இன் செய்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 5 - உங்களுடைய ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
விண்ணப்பதாரர்கள் அதனை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ஹால் டிக்கெட் இல்லாமல், விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆகையால், கட்டாயம் இதை மறக்காமல் எடுத்துச் செல்லவும்.
நீங்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் அதே நேரத்தில் அதன் காப்பி ஒன்று, விண்ணப்பதாரர்களின் மெயில் ஐ.டி-க்கும் அனுப்பி வைக்கப்படும்.