நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. தேசிய தேர்வுகள் முகமை, விரைவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவுள்ளன. அண்மையில், விண்ணப்பப் படிவத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்கக்கோரி விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 13 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு நாள் நீட்டித்து என்டிஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, பேஸ் 1 மற்றும் பேஸ் 2 விண்ணப்பப் படிவத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வசதி அக்டோபர் 14 ஆம் தேதி இரவு 11.50 வரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தற்போது கிடைத்த இறுதி வாய்ப்பில் பாலினம், குடியுரிமை. மெயில் ஐடி, பிரிவு, உட்பிரிவு, கல்வித்தகுதி ஆகிய விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மெயில் ஐடியை கூடுதலாக ஒருமுறை சரியானதா என்பதை பார்த்திட என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால், அந்த மெயில் ஐடிக்கு தான் விண்ணப்பதாரரின் OMR responce sheet மற்றும் தேர்வு முடிவு(scorecard) அனுப்பப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் ஆன்சர் கீ
நீட் ஆன்சர் கீ வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், விண்ணப்பப் படிவம் திருத்தும் தேதி முடிவடைந்ததும், ஆன்சர் கீ வெளியிடப்படும் என கூறப்படுகிறது. அதன்படி, நீட் ஆன்சர் கீ வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆன்சர் கீ வெளியானதும் மாணவர்கள் விடை குறித்த சந்தேகங்களை ஆன்லைனில் பணம் செலுத்தி எழுப்பலாம். அதன்பின்னர், பைனல் ஆன்சர் கீ வெளியிடப்படும். அதன் அடிப்படையில் தான், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும். நீட் தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய, என்டிஏ அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிட்டு அறிந்துகொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil