இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பல மாணவர்கள் தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகின்ற மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான நகர தகவல் சீட்டு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: NEET UG 2023: நீட் தேர்வு தள்ளிப் போகுமா? காரணங்களை அடுக்கியபடி கோர்ட் படியேறிய மாணவர்கள்
இந்தநிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தேர்வை ஒத்திவைக்கக் கோரி Change.org என்ற இணையத்தில் ஒரு மனுவைத் தொடங்கியுள்ளனர். இதுவரை 6,000 மாணவர்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த மனுவில், தொற்றுநோய்க்கு முந்தைய கல்வி அட்டவணையை மீண்டும் கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் நீட் தேர்வை 15 நாட்களுக்கு ஒத்திவைப்பது எந்தத் தீங்கும் செய்யாது என்று கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ஒத்திவைப்பதை அதிகாரிகள் ஏன் பரிசீலிக்க வேண்டும் என்பதற்கான சில உண்மையான காரணங்களையும் அந்த மனுவில் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதன்படி, அந்த மனுவில், “சில மாநிலங்களின் வாரிய தேர்வுகள் இடையில் வருகின்றன. மே 7 ஆம் தேதி வாரியத் தேர்வு இல்லை என்றாலும், வாரியத் தேர்வுக்கும் நீட் தேர்வுக்கும் இடையே இடைவெளி குறைந்தது 15 நாட்கள் இருக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. ஜம்மு வாரியத்திற்கு மே 3 ஆம் தேதி புவியியல் தேர்வு உள்ளது. நீட் தேர்வோடு இந்த தேர்வை ஒரு மாணவரால் நிர்வகிப்பது சாத்தியமில்லை. பஞ்சாப் வாரியத்தில் தேர்வுகள் நடந்து வருகின்றன. NIOS வாரியத்திற்கும் மே 6 மற்றும் 8 தேதிகளில் தேர்வு உள்ளது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு மாணவர்கள் தேர்வு நடத்தும் அமைப்பான தேசிய தேர்வு முகமையிடம் (NTA) கோரிக்கை வைத்தனர். சி.பி.எஸ்.இ மற்றும் பிற மாநில வாரியத் தேர்வுக்குப் பிறகு மருத்துவ நுழைவுத்தேர்வுக்குத் தயாராவதற்கு குறைந்த நேரமே கிடைப்பதாக மாணவர்களில் ஒரு பகுதியினர் கூறினர்.
இதுதொடர்பாக #NEETUG2023POSTPONE #NEETUG2023 #NEETPOSTPONE #NEETUG2023POSTPONE #postponeNEETUG2023, #postponeneetug2023onlytilljune #NamoJiHelpNeetUG203 போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
CBSE 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வு ஏப்ரல் 5, 2023 அன்று நடந்து முடிந்தது. CBSE வாரியத் தேர்வுக்குப் பிறகு (ஏப்ரல் 5), மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதற்கு 32 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. நீட் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
நீட் தேர்வுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தேசிய தேர்வு முகமை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதும், பதிவுசெய்த மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil