இது குறித்து புதுச்சேரி அரசு உயர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் சேர்க்கை குழு என்று அழைக்கப்படும் சென்டாக் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி உள்ளதாவது,
புதுச்சேரியில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவம் / பல் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரி அரசு / அகில இந்திய ஒதுக்கீடு (மேலாண்மை)/ என்.ஆர்.ஐ மற்றும் சுய-ஆதரவு (SS) ஒதுக்கீட்டின் கீழ் முதல் ஆண்டு MBBS/ BDS/ BAMS மற்றும் B.V.Sc & A.H படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர்கள் அகில இந்திய கவுன்சிலிங்கில் கலந்துக் கொள்கிறார்கள் என்பதை குறிப்பிட விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது NEET ரேங்கை குறிப்பிட வேண்டும்.
B.V.Sc படிப்பில் தேசிய அளவில் சுய ஆதரவு பிரிவில் சேர்க்கை கோரும் OBC விண்ணப்பதாரர்கள் OBC அல்லாத கிரீமி லேயர் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறை தொடங்கும் நாள்: 12.07.2023. விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.07.2023 ஆகும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil