Advertisment

3800 எம்.பி.பி.எஸ் 'சீட்'களுக்கு ஆபத்து; நீட் கட் ஆஃப் உயரும்?

38 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் இழப்பால் 3800 இடங்களுக்கு பாதிப்பு; நீட் கட் ஆஃப் உயருமா?

author-image
WebDesk
New Update
MBBS

மருத்துவ படிப்பு

நாடு முழுவதும் 38 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நீட் கட் ஆஃப் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

தேசிய மருத்துவ ஆணையம் பல்வேறு குறைகளைச் சுட்டிக்காட்டி, இந்தியா முழுவதும் 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு குறைகளைச் சரிசெய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், அஸ்ஸாம், பஞ்சாப், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் இந்த நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளன.

இதையும் படியுங்கள்: NEET UG Results 2023: ஜூன் மாதம் இந்த வாரத்தில்… நீட் தேர்வு முடிவு தேதி லேட்டஸ்ட் அப்டேட்

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கே.ஏ.பி விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது.

மேலும், கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி, அசாம் மருத்துவக் கல்லூரி, ஃபக்ருதீன் அலி அகமது மருத்துவக் கல்லூரி, எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சிந்த்பூர்ணி மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்லூரிகள் பயோமெட்ரிக் முறையில் ஊழியர்கள் வருகையை குறிக்காதது மற்றும் புதிய கேமரா, பயோமெட்ரிக் மற்றும் சுகாதார மேலாண்மை அமைப்பு அடிப்படையிலான கண்காணிப்பை கல்லூரிகள் செயல்படுத்த முடியாதது முதல் ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் நிறுவனங்கள் வரை மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளன.

இதற்கிடையில் நீட் தேர்வு நடைபெற்று முடிந்து, 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தேர்வு முடிவுகள் ஜூன் 2 ஆம் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால், ஏறத்தாழ 3800 மருத்துவ இடங்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் அங்கீகாரம் இழந்த நிறுவனங்கள் நீட் கவுன்சிலிங்கில் பங்கேற்குமா? இல்லையா? என்பதை தேசிய மருத்துவ ஆணையம் தெளிவுப்படுத்தவில்லை.

தற்போது நாடு முழுவதும் 99,763 மருத்துவ இடங்கள் உள்ள நிலையில், அதில் 3,800 இடங்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இருப்பினும் மருத்துவ ஆணையம் விரைவில் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த மருத்துவ கல்லூரிகள் நீட் கவுன்சிலிங்கில் பங்கேற்காவிட்டால், நீட் கட் ஆஃப் உயர வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment