/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-29.jpg)
NEET Counselling 2019 Round 1 Seat Allotment Result : நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மருத்துவ படிப்புகள் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக, பதிவு செய்தவர்களில் முதற்கட்டமாக சீட் ஒதுக்கப்பட்டவர்களின் தேர்வு http://mcc.nic.in இணையதளத்தில் ஜூலை 1ம் தேதி வெளியிடப்பட்டன.
முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூலை 1 முதல் ஜூலை 6ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ள இயலாத இந்த சுற்று மாணவர்கள், இரண்டாவது சுற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள ஜூலை 9 முதல் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவையான ஆவணங்கள்
நீட் தேர்வு ஹால் டிக்கெட்
நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்
இந்தியர் என்பதற்கான சான்று பள்ளி டிசி சான்றிதழ் /பாஸ்போர்ட்
கல்வி சான்றிதழ்கள்
இரண்டாம் சுற்றுக்கான பதிவு மற்றும் சாய்ஸ் லாக்கிங், ஜூலை 12ம் தேதி மதியம் 3 மணியுடன் முடிவடைகிறது. இரண்டாம் சுற்றுக்கான சீட் ஓதுக்கீடு ஜூலை 12 முதல் 15ம் தேதி வரை நடைபெறும். இதன் முடிவுகள், ஜூலை 15ம் தேதி வெளியிடப்படும். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூலை 22ம் தேதி முடிவடையும்.
இந்த இரண்டு சுற்றுகளுக்கு பிறகும் எஞ்சியிருக்கும் சீட்கள் மத்திய மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்கள் மற்றும் ESIC சார்ந்த கல்லூரிகளில் நிரப்பப்படும். இதற்கான சீட் ஒதுக்கீடு நடவடிக்கை ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை நடைபெறும். இதன் முடிவுகள் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஆகஸ்ட் 20 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.