இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் விரைவில் தொடங்கவுள்ளது. கவுன்சிலிங் தேதி குறித்து அறிவிப்பையும், மற்ற தகவல்களையும் எம்சிசியின் அதிகாரப்பூர்வ தளத்தில் mcc.nic.in -இல் காணலாம்.
15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.
மாணவர்களின் கனவு கல்லாரியாக ஒவ்வொரு ஆண்டும் எய்ம்ஸ் திகழ்கிறது. அதிக கட்-ஆஃப், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களால் மட்டுமே அங்கு சேர முடியும். அதே சமயம், எய்ம்ஸ் மட்டுமின்றி பல சிறந்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அந்த கல்லூரிகளின் விவரங்களை மாணவர்கள் இச்செய்திதொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.
நீட் கவுன்சிலிங் பிராசஸில் ரெஜிஸ்ட்ரேஷன், பணம் செலுத்ததல், விருப்ப கல்லூரி தேர்ந்தெடுத்தல், கல்லூரி முடிவு செய்தல், இருக்கை ஒதுக்கீடு, சம்பந்தப்பட்ட கல்லூரியில் ரிப்போட் செய்வது ஆகியவை ஆகும்.
நீட் கவுன்சிலிங்: சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல்
- முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) சண்டிகர்
- கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு
- தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம்( NIMHANS), கர்நாடகா
- சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம், உத்தரப் பிரதேசம்
- அமிர்தா விஷ்வ வித்யாபீடம், தமிழ்நாடு
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசம்
- ஜிம்பர், புதுச்சேரி
- கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி, உத்தரப் பிரதேசம்
- கஸ்துார்பா மருத்துவக் கல்லூரி, மணிபால்
- ஸ்ரீ சித்ராத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கேரளா
- கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனம் , டெல்லி
- செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரி, கர்நாடகா
- ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு
- அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசம்
- மெட்ராஸ் மருத்துவ கல்லூரி, தமிழ்நாடு
- மௌலானா ஆசாத் மருத்துவ கல்லூரி, டெல்லி
- வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, டெல்லி
- டி ஒய் பாட்டீல் வித்யாபீத், மகாராஷ்டிரா
- எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு
சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில், 8 லட்சத்து 70 ஆயிரத்து 74 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 3 மாணவர்கள், 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil