Advertisment

NEET Counselling: அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்தாண்டு கட்ஆஃப் மார்க் தெரிஞ்சுக்கோங்க!

நீட் கவுன்சிலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் கடந்தாண்டு கட்ஆஃப் மார்க் பிரிவு வாரியாக இச்செய்தி தொகுப்பில் காணலாம்

author-image
WebDesk
New Update
NEET Counselling: அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்தாண்டு கட்ஆஃப் மார்க் தெரிஞ்சுக்கோங்க!

லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் இளங்கலை மருத்துவ மாணவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதிக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். விரைவில் எம்சிசி தளத்தில் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவுள்ளது.

Advertisment

15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, அரசு கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர அனைவரும் விரும்புவார்கள். நீட்டில் முதலிடம் பெற்ற மிரினால் குட்டேரி, எய்ம்ஸ் டெல்லியில் சேர விரும்புவதாக தெரிவித்தார்.

மாணவர்கள் கல்லூரிகள் நிர்ணயித்த கட்ஆஃப் மார்க்கை பெறுவதன் மூலம், கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் சேரலாம். கவுன்சிலிங்கின் போது, மாணவர்களின் விருப்ப பாடம் மற்றும் கல்லூரிகள் தேர்ந்தெடுக்க கூறப்படும்.

நீட் கவுன்சிலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் கடந்தாண்டு கட்ஆஃப் மார்க் பிரிவு வாரியாக கீழே காணலாம்

கல்லூரி நீட் 2020 கட்ஆஃப்
(பொதுப்பிரிவு)
நீட் 2020 கட்ஆஃப்
(எஸ்சி)
நீட் 2020 கட்ஆஃப்
(எஸ்.டி)
மெளவுலனா ஆசாத் கல்லூரி, டெல்லி 90 1475 --
VMMC & சப்தர்ஜங் மருத்துவமனை, டெல்லி 163 2050 --
பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லூரி, டெல்லி 324 3,207 ---
லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, டெல்லி 571 13,646 19,752
அரசு மருத்துவக் கல்லூரி, சண்டிகர் 776 16,444 ---
சேத் ஜி.எஸ் மருத்துவக் கல்லூரி, மும்பை 457 2,065 26,559
கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம், லக்னோ 1,800 7,765 38,458
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை 5,253 42,321 57,079
பகவத் தயாள் சர்மா முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம், ரோஹ்தக் 6,573 52,059 68,549
கிராண்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் சர் ஜேஜே குழும மருத்துவமனைகள், மும்பை 2,828 23,997 48,835

நீட் யுஜி கவுன்சிலிங் இடஒதுக்கீடு

  • பட்டியலின பிரிவு - 15%
  • பட்டியலின பழங்குடியினர் - 7.5%
  • PwD - 5% கிடைமட்ட இட ஒதுக்கீடு
  • ஓபிசி( சமூகவாய்ப்பு பெற்றவர்கள் இல்லாதவர்கள்) - 27% தேசிய நிறுவனங்கள் அல்லது மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டும்)
  • EWS- 10% (தேசிய நிறுவனங்கள் அல்லது மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டும்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment