NEET Counselling: அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்தாண்டு கட்ஆஃப் மார்க் தெரிஞ்சுக்கோங்க!

நீட் கவுன்சிலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் கடந்தாண்டு கட்ஆஃப் மார்க் பிரிவு வாரியாக இச்செய்தி தொகுப்பில் காணலாம்

லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் இளங்கலை மருத்துவ மாணவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதிக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். விரைவில் எம்சிசி தளத்தில் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவுள்ளது.

15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, அரசு கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர அனைவரும் விரும்புவார்கள். நீட்டில் முதலிடம் பெற்ற மிரினால் குட்டேரி, எய்ம்ஸ் டெல்லியில் சேர விரும்புவதாக தெரிவித்தார்.

மாணவர்கள் கல்லூரிகள் நிர்ணயித்த கட்ஆஃப் மார்க்கை பெறுவதன் மூலம், கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் சேரலாம். கவுன்சிலிங்கின் போது, மாணவர்களின் விருப்ப பாடம் மற்றும் கல்லூரிகள் தேர்ந்தெடுக்க கூறப்படும்.

நீட் கவுன்சிலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் கடந்தாண்டு கட்ஆஃப் மார்க் பிரிவு வாரியாக கீழே காணலாம்

கல்லூரிநீட் 2020 கட்ஆஃப்
(பொதுப்பிரிவு)
நீட் 2020 கட்ஆஃப்
(எஸ்சி)
நீட் 2020 கட்ஆஃப்
(எஸ்.டி)
மெளவுலனா ஆசாத் கல்லூரி, டெல்லி901475
VMMC & சப்தர்ஜங் மருத்துவமனை, டெல்லி1632050
பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லூரி, டெல்லி3243,207
லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, டெல்லி57113,64619,752
அரசு மருத்துவக் கல்லூரி, சண்டிகர்77616,444
சேத் ஜி.எஸ் மருத்துவக் கல்லூரி, மும்பை4572,06526,559
கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம், லக்னோ1,8007,76538,458
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை5,25342,32157,079
பகவத் தயாள் சர்மா முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம், ரோஹ்தக்6,57352,05968,549
கிராண்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் சர் ஜேஜே குழும மருத்துவமனைகள், மும்பை2,82823,99748,835

நீட் யுஜி கவுன்சிலிங் இடஒதுக்கீடு

  • பட்டியலின பிரிவு – 15%
  • பட்டியலின பழங்குடியினர் – 7.5%
  • PwD – 5% கிடைமட்ட இட ஒதுக்கீடு
  • ஓபிசி( சமூகவாய்ப்பு பெற்றவர்கள் இல்லாதவர்கள்) – 27% தேசிய நிறுவனங்கள் அல்லது மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டும்)
  • EWS- 10% (தேசிய நிறுவனங்கள் அல்லது மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டும்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Neet counselling 2021 check previous year cut off for government colleges

Next Story
காவல் துறையில் பணி செய்ய வேண்டும் என்பது உங்கள் ஆசையா? இதோ அந்த வாய்ப்பு.Tamil Nadu Police Recruitment 2018
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com