நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களும் எம்.பி.பி.எஸ் படிக்கலாம். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ் படிக்க நீட் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். அதேநேரம் 1 லட்சம் இடங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டியிடுவதால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே இடங்கள் கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: NEET Counseling: தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இருப்பினும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரலாம். குறிப்பிட்ட சில கல்லூரிகளில் அகில இந்திய அளவில் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான தரவரிசை பெற்றவர்களுக்கு சீட் கிடைத்துள்ளது. அந்த கல்லூரிகளை தேர்வு செய்யும் பட்சத்தில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களும் தங்கள் எம்.பி.பி.எஸ் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
கல்லூரியின் பெயர் | தரவரிசை நிலை |
ராஜ ராஜேஸ்வரி மருத்துவ கல்லூரி, பெங்களூரு | 1 - 1.9 லட்சம் |
பாரதி வித்யபீடம் சுயநிதி பல்கலைக்கழகம், புனே | 1 – 1.91 லட்சம் |
எம்.ஜி.எம் மருத்துவ கல்லூரி, நவி மும்பை | 1 – 1.95 லட்சம் |
ஜெ.எல்.என் மருத்துவ கல்லூரி, வர்தா | 1 – 1.96 லட்சம் |
எஸ்.பி.கே.எஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுமன் தீப் வித்யா பீடம் | 1 – 2.5 லட்சம் |
எம்.எம். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் | 1 – 1.15 லட்சம் |
ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி சென்னை | 1.01 – 4.11 லட்சம் |
எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி சென்னை | 1.2 – 3.01 லட்சம் |
வி.எம்.கே.வி மருத்துவ கல்லூரி சேலம் | 1.03 – 3.41 லட்சம் |
பி.எல்.டி.இ சுயநிதி பல்கலைகழகம் பிஜப்பூர் | 1.04 – 1.45 லட்சம் |
டாக்டர் டி.ஒய் பாட்டீல் மருத்துவ கல்லூரி புனே | 1.03 – 2.83 லட்சம் |
ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி சென்னை | 1.13 – 4.34 லட்சம் |
கிருஷ்ணா மருத்துவ அறிவியல் நிறுவனம் கரட் | 1 – 2.97 லட்சம் |
எஸ்.யூ.எஸ் மருத்துவ அறிவியல் நிறுவனம் புவனேஷ்வர் | 1 – 1.49 லட்சம் |
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சென்னை | 1 – 1.66 லட்சம் |
யெனெபோயா மருத்துவ கல்லூரி மங்களூர் | 1.01 – 1.35 லட்சம் |
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.