எம்.பி.பி.எஸ் படிக்க விரும்புபவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவது எப்படி? கவுன்சலிங் செயல்முறை எப்படி இருக்கும்? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சலிங் மற்றும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சலிங் என இரண்டு பிரிவுகளாக நடைபெறும். நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இரண்டு கவுன்சலிங்கிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் விண்ணபிக்கின்றனர். அகில இந்திய ஒதுக்கீட்டில் எய்ம்ஸ் போன்ற இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ கல்வி நிறுவனங்களில் இடங்களை பெறுவதோடு, மாநில கல்லூரிகளில் உள்ள 15% இடங்களையும் பெறலாம். எனவே அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு மூலமே, நீங்கள் விரும்பிய கல்லூரிகளில் இடம் பெறலாம்.
இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சலிங்கை மருத்துவ கவுன்சில் கமிட்டி நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான முதற்கட்ட கவுன்சலிங் தற்போது முடிவடைந்துள்ளது. இந்தநிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவது எப்படி? கவுன்சலிங் செயல்முறை எப்படி இருக்கும்? என்பதை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisement
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சலிங்கின் ஒதுக்கீடு ஜூலை 29 அன்று வழங்கப்பட்டது. இடம் கிடைத்தவர்கள் 3 வாய்ப்புகளை பின்பற்றலாம். ஒன்று கல்லூரிகளில் சேரலாம் அல்லது கல்லூரியில் சேர்ந்த பின் விரும்பிய கல்லூரி கிடைக்காதவர்கள் முன்னுரிமைக்குச் செல்லலாம் அல்லது ஒதுக்கீட்டை வேண்டாம் என்று நிராகரித்து இரண்டாம் சுற்றுக்குச் செல்லலாம். இடம் கிடைக்கவில்லை என்றால், நேரடியாக இரண்டாவது சுற்றுக்குச் செல்லலாம்.
இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கான பதிவு ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற்றது. சாய்ஸ் ஃபில்லிங் ஆக்ஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும். இதற்கிடையில் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று முடிந்து, நிரம்பிய இடங்கள் மற்றும் காலியிடங்களின் தகவல்கள் மருத்துவ கவுன்சிலிடம் ஒப்படைக்கப்படும். ரவுண்ட் 1ல் கலந்துக் கொண்டவர்கள் புதிதாக பதிவுச் செய்ய தேவையில்லை, ஆனால் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும். மற்றவர்கள் புதிதாக பதிவு செய்து, சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும்.
முதல் ரவுண்டில் முன்னுரிமை கொடுத்தவர்கள் இடம் கிடைத்தால் கல்லூரியில் சேரலாம், அல்லது முன்னுரிமை கொடுக்கலாம். புதிதாக பதிவு செய்தவர்களுக்கு ரவுண்ட் 1 போலவே கவுன்சலிங் நடைபெறும். அடுத்ததாக இதேபோல் ரவுண்ட் 3 கவுன்சலிங் நடைபெறும். கடைசியாக காலி இடங்களுக்கான நான்காவது சுற்று நடைபெறும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil