புதுச்சேரியில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கையின் சென்டாக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் பி.வி.எஸ்.சி ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கைக்கு சென்டாக் மூலம் விண்ணப்பம் பெற்று வரப்படுகிறது.
இதையும் படியுங்கள்: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் 5 ஆண்டு படிப்பு; க்யூட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்தநிலையில், இதற்கான விண்ணப்பங்கள் வரவேண்டிய கடைசி நாள் நீடிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் வரும் 20 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என சென்டாக் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .
இது குறித்து சென்டாக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, இளங்கலை நீட் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2023-24 கல்வியாண்டுக்கான M.B.B.S., B.D.S., B.V.Sc.&A.H மற்றும் BAMS (தேசிய SS & NRI) ஆகியவற்றுக்கான சேர்க்கைகள் NEET UG அடிப்படையில் நடைபெறும். ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20.07.2023, மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இணையதளத்தைப் பார்வையிடலாம் www.centacpuducherry.in. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil