புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார்.
புதுச்சேரியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்: TN Medical Counselling 2023: எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் குறையும்; கல்வியாளர் அஸ்வின் கூறுவது என்ன?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், புதுச்சேரியில் 10% வழங்க துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
புதுச்சேரி தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் இருந்தே இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil