NEET Counselling: கம்மியா மார்க் எடுத்தாலும் எம்.பி.பி.எஸ் சீட்; இதை தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்; அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட் ஆஃப் விவரங்கள் இங்கே

தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்; அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட் ஆஃப் விவரங்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mbbs students

mbbs students

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், எந்தக் கல்லூரியில் எவ்வளவு கட் ஆஃப் இருந்தால் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழ்நாட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. மாணவர்கள் ஜூலை 10 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்: NEET Counselling: டாப் மருத்துவக் கல்லூரிகள் எவை? கர்நாடகாவில் அட்மிஷன் நடைமுறை எப்படி?

இந்தநிலையில், எந்தக் கல்லூரியில் எவ்வளவு கட் ஆஃப் இருந்தால் சீட் கிடைக்கும் என்பதை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதில், மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களுக்கு தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisment
Advertisements

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் சென்னை கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியும் அடங்கும். இதுதவிர 24 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

உங்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் என்றால், அதனையே தேர்வு செய்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் மற்றொரு தமிழ்நாடு மாணவருக்கு இடம் கிடைக்கும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில இடங்கள் என இரண்டுக்கும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் பட்சத்தில் அதனை தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு கட் ஆஃப் – பொதுப் பிரிவு

கல்லூரியின் பெயர்ஆரம்ப கட் ஆஃப்முடிவு கட் ஆஃப்
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை60797
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை8451778
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை11232802
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்7114468
எய்ம்ஸ் மதுரை31814737
வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர்22494793
மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை23165004
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை33675015
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்38367391
இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை55587581
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு58167838
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம்77588235
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி10238299
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர்68028574
தேனி மருத்துவக் கல்லூரி, தேனி80779785
கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி537810140
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி613610842
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி170611178
தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி848811257
விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம்1106911648
அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர்747912024
திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர்1154912094
அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு1154512303
கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம்887412698
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை1071712755
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை802014010
அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர்1130114467
சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை1135114471
அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி795214666
கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர்1345714726
அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல்804715591
அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல்1393615686
அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர்1340415972
அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்758516601
அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி1397016605
அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி1283016732
அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம்1401316771
அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம்1396616897

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு கட் ஆஃப் – ஓ.பி.சி

கல்லூரியின் பெயர்ஆரம்ப கட் ஆஃப்முடிவு கட் ஆஃப்
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை8061294
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை18523192
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை31494021
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்46975709
எய்ம்ஸ் மதுரை48535866
மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை50997022
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை54307242
வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர்64387729
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்74298925
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு80089295
இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை932110108
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம்904410716
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி956710799
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர்941410872
கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி1123711511
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி1114612122
தேனி மருத்துவக் கல்லூரி, தேனி1143712211
தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி1137613415
அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு1314913455
திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர்1268113675
விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம்1328413691
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி1137114288
கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம்1311014403
அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர்1357214947
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை1417015204
சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை1493215328
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை1410915380
கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர்1477115562
அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர்1496915839
அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி1469616737
அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல்1587116819
அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர்1607317017
அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல்1589017102
அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம்1690417137
அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம்1693717288
அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி1712017312
அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்1718317446
அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி1692217453

இதேபோல், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான கட் ஆஃப் விவரங்களையும் கீழே உள்ள காணொலி மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Neet Mbbs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: