தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கவுன்சிலிங் தொடங்கவுள்ள நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளுக்குத் தேவையான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கின் முதல் சுற்று முடிவடைந்து, இரண்டாம் சுற்று தொடங்க உள்ளது. இதனையடுத்து முதல் சுற்றின் முடிவில் காலியாக உள்ள இடங்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் இந்த இணையதளம் மூலமாக காலியிடங்களைத் தெரிந்துக் கொள்ளலாம். - https://tnmedicalselection.net/news/23082023010026.pdf
இந்தநிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் இரண்டாம் சுற்றில் எந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் வரை இடங்கள் கிடைக்கும் என எவர்கிரீன் கைடன்ஸ் யூடியூப் சேனல் விளக்கியுள்ளது. இரண்டாம் சுற்றுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 165 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட 60 இடங்கள் கூடுதலாக உள்ளன.
Advertisment
Advertisements
முதல் சுற்று முடிவில் பிரிவு வாரியான ரேங்க் மற்றும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 606
ரேங்க் – 1325
பி.சி
கட் ஆஃப் – 560
ரேங்க் – 1918
பி.சி.எம்
கட் ஆஃப் – 542
ரேங்க் – 190
எம்.பி.சி
கட் ஆஃப் – 532
ரேங்க் – 1051
எஸ்.சி
கட் ஆஃப் – 452
ரேங்க் – 675
எஸ்.சி.ஏ
கட் ஆஃப் – 383
ரேங்க் – 123
எஸ்.டி
கட் ஆஃப் – 355
ரேங்க் – 43
இரண்டாம் சுற்றுக்கு எதிர்ப்பார்க்கப்படும் ரேங்க் மற்றும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 603
ரேங்க் – 1404
பி.சி
கட் ஆஃப் – 555
ரேங்க் – 2034 - 2050
பி.சி.எம்
கட் ஆஃப் – 541
ரேங்க் – 194 - 196
எம்.பி.சி
கட் ஆஃப் – 530
ரேங்க் – 1075 - 1090
எஸ்.சி
கட் ஆஃப் – 450
ரேங்க் – 689 - 699
எஸ்.சி.ஏ
கட் ஆஃப் – 383
ரேங்க் – 123
எஸ்.டி
கட் ஆஃப் – 355
ரேங்க் – 43
இந்த ரேங்கில் 10 ரேங்க் வரை மாறுபாடு இருக்கலாம். அதுபோல் கட் ஆஃப் மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் கூடுதலாகவோ குறைவாகவோ வரலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil