Advertisment

MBBS Expected Cut Off: எஸ்.சி பிரிவு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப்; கல்லூரி வாரியாக விவரம் இங்கே

தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் எஸ்.சி பிரிவினருக்கு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் எவ்வளவு? முழு விவரம் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mbbs students

mbbs students

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விரைவில் தொடங்க உள்ள நிலையில், எஸ்.சி பிரிவு மாணவர்களுக்கான கட் ஆஃப் எவ்வளவு இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைகான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது அதற்கான, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் எஸ்.சி பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண்கள் இருக்கும் என கிளாசிக் நீட் அகாடமி யூடியூப் சேனலில் டாக்டர் பெரியசாமி முழுமையாக விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: NEET Counselling: தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்; பி.சி, எம்.பி.சி கல்லூரி வாரியான கட் ஆஃப் இதோ!

அந்த வீடியோவில், தமிழ்நாடு மருத்துவ சேர்க்கை வாரியம் வெளியிட்டுள்ள சீட் மேட்ரிக்ஸ் படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எஸ்.சி பிரிவினருக்கு 610 இடங்கள் உள்ளன. இதனால் எஸ்.சி பிரிவினருக்கு கட் ஆஃப் 455 ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சிலர் சென்றால், கட் ஆஃப் 451 ஆக குறைய வாய்ப்புள்ளது.

எஸ்.சி பிரிவுக்கு கல்லூரி வாரியான கட் ஆஃப் விவரம்

1)    மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை - 591

2)    ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 569

3)    கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 556

4)    ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை – 545

5)    மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - 538

6)    கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் - 538

7)    செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு - 527

8)    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் – 527

9)    அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் – 520

10)   கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி - 515

11)   அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர் – 508

12)   திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி - 508

13)   வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர் – 506

14)   விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் - 500

15)   அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு – 497

16)   இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை - 497

17)   தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி – 492

18)   தேனி மருத்துவக் கல்லூரி, தேனி - 489

19)   அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் – 488

20)   திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை – 486

21)   தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி - 484

22)   கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம் - 482

23)   கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி - 478

24)   திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் – 477

25)   கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர் – 473

26)   புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை – 470

27)   சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை - 470

28)   அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் - 464

29)   அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி - 464

30)   அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி – 464

31)   அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் - 462

32)   அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல் - 462

33)   அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் - 460

34)   அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர் - 459

35)   அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் – 457

36)   அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம் - 457

37)   அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி - 455

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment