Advertisment

NEET 2023 Expected Cut Off: பி.சி, எம்.பி.சி, எஸ்.சி பிரிவினருக்கு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் எவ்வளவு? கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம்

தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்: எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான பிரிவு வாரியான கட் ஆஃப் எவ்வளவு? அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே போட்டி எப்படி இருக்கும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET exam students

நீட் தேர்வு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்தநிலையில், ஒவ்வொரு பிரிவுக்கும் கட் ஆஃப் எவ்வளவு இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைகான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒவ்வொரு பிரிவுக்கும் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு? என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

இதையும் படியுங்கள்: MBBS, BDS Expected Cut Off: ஷாக்… எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் 30 மார்க் வரை உயரும் வாய்ப்பு; லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

இதுதொடர்பாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த ஆண்டு கட் ஆஃப் 25 மதிப்பெண்கள் வரை உயரக் கூடும். தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களில் கடந்த ஆண்டு 700 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 29 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 650 மதிப்பெண்களுக்கு மேல் 199 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 379 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 600 மதிப்பெண்களுக்கு மேல் 953 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 1538 பேர் உள்ளனர்.

கடந்த ஆண்டு 550 மதிப்பெண்களுக்கு மேல் 2436 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 3668 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 500 மதிப்பெண்களுக்கு மேல் 4470 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 6449 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 450 மதிப்பெண்களுக்கு மேல் 6709 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 9354 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 400 மதிப்பெண்களுக்கு மேல் 8763 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 12037 பேர் உள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்

பொதுப் பிரிவு: 600 - 602

BC: 554 - 557

BCM: 530 - 534

MBC: 528 - 531

SC: 465 - 470

SCA: 420 - 429

ST: 390 - 396

தனியார் கல்லூரிகளுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்

பொதுப் பிரிவு: 540 - 542

BC: 512 - 516

BCM: 502 - 503

MBC: 492 - 495

SC: 420 - 424

SCA: 352 - 357

ST: 290 – 293

சுயநிதி பல்கலைக்கழகங்களுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்

பொதுப் பிரிவு: 505 - 508

BC: 495 - 500

BCM: 500 - 503

MBC: 485 - 488

SC: 415 - 420

SCA: 350 - 359

ST: 270 - 272 அதேநேரம் அரசு பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 500 மதிப்பெண்களுக்கு மேல் 2 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 15 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 450 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 60 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 400 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 195 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 350 மதிப்பெண்களுக்கு மேல் 93 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 534 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 300 மதிப்பெண்களுக்கு மேல் 250 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 1190 பேர் உள்ளனர். எனவே கட் ஆஃப் 15 - 17 மதிப்பெண்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment