தமிழகத்தில் மருத்துவ படிப்புகளின் சேர்க்கைக்கான முதல் சுற்று கவுன்சிலிங் முடிந்து ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருந்ததுள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று கவுன்சிலிங் முடிவடைந்து தற்போது, ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. உறுதி செய்யும் மாணவர்கள் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் அந்த கல்லூரிகளில் சேர்க்கைப் பெற வேண்டும்.
இதையும் படியுங்கள்: 400 எம்.பி.பி.எஸ் ‘சீட்’களை இழக்கும் தமிழ்நாடு? என்.எம்.சி கடைசி நேர ட்விஸ்ட்; நீட் தேர்வர்கள் அதிர்ச்சி
இந்தநிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் கட் ஆஃப் அதிகரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது முதல் சுற்று முடிவில் கட் ஆஃப் எப்படி உள்ளது என்பதை இப்போது பார்ப்போம். கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு முதல் சுற்றில் 7612 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நீட் தேர்வில் 715 பெற்றவர் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜை தேர்வு செய்துள்ளார். குறைந்தபட்சமாக நீட் தேர்வில் 107 மதிப்பெண் பெற்றவருக்கு தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்ப்பார்த்ததைப் போலவே கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது.
முதல் சுற்று: அரசு மருத்துவ கல்லூரிகளின் கட் ஆஃப்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 606
ரேங்க் – 1325
பி.சி
கட் ஆஃப் – 559
ரேங்க் – 3130
பி.சி.எம்
கட் ஆஃப் – 542
ரேங்க் – 4050
எம்.பி.சி
கட் ஆஃப் – 532
ரேங்க் – 4589
எஸ்.சி
கட் ஆஃப் – 452
ரேங்க் – 9214
எஸ்.சி.ஏ
கட் ஆஃப் – 383
ரேங்க் – 12797
எஸ்.டி
கட் ஆஃப் – 355
ரேங்க் – 14234
முதல் சுற்று: தனியார் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் கட் ஆஃப்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 506
பி.சி
கட் ஆஃப் – 499
பி.சி.எம்
கட் ஆஃப் – 491
எம்.பி.சி
கட் ஆஃப் – 483
எஸ்.சி
கட் ஆஃப் – 397
எஸ்.சி.ஏ
கட் ஆஃப் – 317
எஸ்.டி
கட் ஆஃப் – 301
பி.டி.எஸ் படிப்புகளுக்கான ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.