Advertisment

எம்.பி.பி.எஸ் கவுன்சலிங் 2-வது ரவுண்ட்: அரசு கோட்டாவில் இன்னும் 300 இடங்கள்?

தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் கவுன்சலிங்; 300 இடங்களுக்கு மேல் இரண்டாவது சுற்றுக்கு கிடைக்க வாய்ப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mbbs students

mbbs students

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் சேர்க்கைக்கான முதல் சுற்று கவுன்சிலிங் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது சுற்றில் அரசு ஒதுக்கீட்டில் எவ்வளவு இடங்கள் காலியாக இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கின் முதல் சுற்று முடிவடைந்துள்ளது. ஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்க்கை நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிலருக்கு எதிர்ப்பார்த்த கல்லூரிகள் கிடைத்துள்ளன. சிலருக்கு எதிர்பார்த்த கல்லூரிகள் கிடைக்கவில்லை. அதேநேரம் கட் ஆஃப் மதிப்பெண்களில் பார்டரில் உள்ளவர்களுக்கு ஒதுக்கீடே கிடைக்கவில்லை.

இதையும் படியுங்கள்: அங்கீகாரம் இழக்கும் அபாயத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள்: 1500 எம்.பி.பி.எஸ் ‘சீட்’களுக்கு சிக்கல்

இந்தநிலையில், பார்டரில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக எவர்கிரீன் கைடன்ஸ் யூடியூப் சேனல் நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. இரண்டாவது சுற்றில் 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்க வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் மாநில ஒதுக்கீட்டை தவிர்த்து, அகில இந்திய ஒதுக்கீட்டில் கல்லூரிகளை தேர்வு செய்தால், பார்டரில் உள்ள மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

2022 ஆம் ஆண்டில் இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 105 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 291 இடங்களும் இருந்தன. மொத்தமாக 396 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருந்தன.

அதேபோல் இந்த ஆண்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 120 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 180 இடங்களும் என சுமார் 300 இடங்களுக்கு மேல் இரண்டாம் சுற்றுக்கு வர வாய்ப்புள்ளது. எனவே பார்டரில் உள்ள மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment