தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கவுன்சிலிங் தொடங்கவுள்ள நிலையில், தனியார் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்குத் தேவையான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கின் முதல் சுற்று முடிவடைந்து, இரண்டாம் சுற்று தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களில் இரண்டாம் சுற்றில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் எந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் வரை இடங்கள் கிடைக்கும் என எவர்கிரீன் கைடன்ஸ் யூடியூப் சேனல் விளக்கியுள்ளது. தெலுங்கு மைனாரிட்டி மற்றும் கிறிஸ்டியன் மைனாரிட்டி மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் வரை இடங்கள் கிடைக்கும். தெலுங்கு மைனாரிட்டி இடங்கள் பொதுப் பிரிவுக்கு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
Advertisment
Advertisements
தெலுங்கு மைனாரிட்டி பிரிவில் இரண்டாம் சுற்றுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 417 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட 20 இடங்கள் குறைவாக உள்ளன. இருப்பினும் 320 இடங்கள் வரை பொதுப் பிரிவுக்கு வர வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் 350- 370 மதிப்பெண்கள் வரை உள்ளவர்களுக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சுயநிதி பல்கலைக்கழகங்களில் 300-322 மதிப்பெண்கள் வரை உள்ளவர்களுக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“